NEWS..VIEWS..REVIEWS..NEWS..VIEWS..REVIEWS..NEWS..VIEWS..REVIEWS..NEWS..VIEWS..REVIEWS..NEWS..VIEWS..REVIEWS..NEWS..VIEWS..REVIEWS..NEWS..VIEWS..REVIEWS..NEWS..VIEWS..REVIEWS..NEWS..VIEWS..REVIEWS..NEWS..VIEWS..REVIEWS..NEWS..VIEWS..REVIEWS..NEWS..VIEWS..REVIEWS..NEWS..VIEWS..REVIEWS..NEWS..VIEWS..REVIEWS..NEWS..VIEWS..REVIEWS..NEWS..VIEWS..REVIEWS..NEWS..VIEWS..REVIEWS..NEWS..VIEWS..REVIEWS..NEWS..VIEWS..REVIEWS..NEWS..VIEWS..REVIEWS..NEWS..VIEWS..REVIEWS..

 

Editor:
J.Bismi 

Home

Feedback:
editor@tamilscreen.com
Tuesday, November 24, 2009
       
விமர்சனம் பேட்டி கிசுகிசு ப்ளாஷ்பேக் கட்டுரைகள் பயோடேட்டா
கவர்ச்சீய்படங்கள் குளிர்ச்சிபடங்கள் சின்னத்திரை உலகசினிமா குறும்படங்கள் ஆவணப்படங்கள
       
  Preview

  

 

யாதுமாகி நின்றாய்

மீடியாஒன் குளோபல் என்டெர்டெய்ன்மென்ட் லிமிடெட் தயாரிக்கும் யாதுமாகி நின்றாய் எனும் புதிய நெடுந்தொடர் நவம்பர் 23 முதல் திங்கள் முதல் வியாழன் வரை இரவு 7.30 மணிக்கு ஜீ தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிறது. இத்தொடரில் ஸ்வர்ணமால்யா, நீரஜா, ஸ்ரீரேகா, காத்தாடி ராமமூர்த்தி, நரேந்திரா, மற்றும் பலர் நடிக்கின்றனர்.
இது அழக்கமான அழுகாச்சி தொடராக இல்லாமல் ஆக்கபூர்வமான விஷயங்களை உள்ளடக்கிய தொடராக உருவாகிறது.
தற்போதைய சமுதாயத்தில் சில நேரங்களில் குற்றவாளிகள் தப்பித்துக் கொள்வதும் நிரபராதிகள் தண்டிக்கப்படுவதுமான ஒரு துர்பாக்கிய சூழ்நிலை நிலவி வருகிறது. இதுதான் இத்தொடரின் கதைக்கான ஆதாரமாக அமைக்கப்பட்டிருக்கிறது.
கதையின் நாயகிகளான சாரதா, காயத்ரி, துர்கா ஆகிய மூவரும் சமூக சேவகியாகவும், போலீஸ்
அதிகாரியாகவும், வழக்கறிஞராகவும் சமுதாயத்தின் பொறுப்பான நிலையிலும் அந்தஸ்திலும் சிறந்து விளங்குகிறார்கள். குதூகலமுமாக இந்த மூன்று நாயகிகளின் வாழ்க்கையும் தனித்தனியே பயணம் செய்து கொண்டிருக்கின்றனர்.
தம் முன்னே எழுந்த சாவல்களை அவர்கள் சந்திக்க நேர்ந்த போது அவர்களின் கணவர்கள் அவர்களுக்குத் துணை நின்றார்களா... அல்லது கை விட்டார்களா...? அவர்களின் குழந்தைகள் நிலைமை என்ன ஆனது...? வென்றவர் யார்...? தோற்றவர் யார்...? என கதை தொடர்ந்து பயணிக்கிறது.....
குடும்பப் பின்னனி மட்டுமல்லாமல் சமுதாயத்திற்கு எதிராக நடக்கின்ற குற்றங்களையும் அந்த குற்றங்களை வேரறுக்க மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகளையும் ஒரு த்ரில்லர் பின்னனியோடு சொல்லுகின்ற நெடுந்தொடராம் இது.
இத்தொடருக்கு நடிகைகள் ரேவதியும், ரோஹினி கிரியேட்டிவ் ஹெட்டாக பணியாற்றுகிறார்கள் என்பது கூடுதல் சிறப்பு!
சரவணன் இத்தொடரை இயக்குகிறார்.
தொழில் நுட்ப கலைஞர்கள்
தயாரிப்பாளர் - சூரியராஜ்
இயக்கம் - சரவணன்
ஒளிப்பதிவு - ஜி.பி. கிருஷ்ணா
இசை - மணிபாரதி
கிரியேட்டிவ் ஹெட் - ரேவதி, ரோஹினி
புரொடக்ஷன் டிசைன் - சுதா வரதராஜன்
எக்ஸிகியூட்டிவ் புரொட்யூசர் - ஸ்டுடியோ ஒன் ஸ்டோரி டிபி£ர்ட்மென்ட்
மக்கள் தொடர்பு - எஸ்.செல்வரகு

 

 





 

   
 

Copyright © 2005 tamilscreen.com  All rights reserved.
Best view under 800 X 600 Resolution with Netscape 4.x or IE 4.x and above version.

Netscape 6 not recommended