NEWS..VIEWS..REVIEWS..NEWS..VIEWS..REVIEWS..NEWS..VIEWS..REVIEWS..NEWS..VIEWS..REVIEWS..NEWS..VIEWS..REVIEWS..NEWS..VIEWS..REVIEWS..NEWS..VIEWS..REVIEWS..NEWS..VIEWS..REVIEWS..NEWS..VIEWS..REVIEWS..NEWS..VIEWS..REVIEWS..NEWS..VIEWS..REVIEWS..NEWS..VIEWS..REVIEWS..NEWS..VIEWS..REVIEWS..NEWS..VIEWS..REVIEWS..NEWS..VIEWS..REVIEWS..NEWS..VIEWS..REVIEWS..NEWS..VIEWS..REVIEWS..NEWS..VIEWS..REVIEWS..NEWS..VIEWS..REVIEWS..NEWS..VIEWS..REVIEWS..NEWS..VIEWS..REVIEWS..

 

Editor:
J.Bismi 

Home

Feedback:
editor@tamilscreen.com
Wednesday, July 22, 2009
       
விமர்சனம் பேட்டி கிசுகிசு ப்ளாஷ்பேக் கட்டுரைகள் பயோடேட்டா
கவர்ச்சீய்படங்கள் குளிர்ச்சிபடங்கள் சின்னத்திரை உலகசினிமா குறும்படங்கள் ஆவணப்படங்கள
       
  Latest Updates

  

 

விழியில் விழுந்தவள்

எல்லோருக்கும் பிடிக்கிற கதை

ஜீ-அன்ட்ஸ் நிறுவனம் தயாரிப்பில் விரைவில் வெளிவர உள்ள படம், ''விழியில் விழுந்தவள்''. அடிப்படையில் சாஃப்ட்வேட் நிறுவனம் நடத்திக் கொண்டிருக்கும் இளைஞரான அஜாஸ் திரைக்கதை, வசனம் எழுதி படத்தை இயக்குவதோடு தானே தனது கம்யூட்டர் நிறுவனம் மூலமாக இப்படத்தை தயாரிக்கவும் செய்கிறார்.

இயக்கம், தயாரிப்போடு கதாநாயகனாகவும் அவர், அறிமுகம் ஆகிறார். இது என்ன மாதிரி படம் என்று அவரிடம் கேட்டால், ''இது காதல், காமெடி, சென்டிமென்ட் கலந்த கதை, பார்க்கிற எல்லோருக்கும் பிடிக்கிற கதை. ஒரு இளைஞன் தன்னோட காதலுக்காக, காதலிக்காக தனது நிலைகளை பலவாறு மாற்றிக் கொண்டு பல கெட்டப் மாற்றுவதுதான் கதை. இடைவேளை வரை யதார்த்தமான காமெடிப் படமாக இருக்கும். இடைவேளைக்குப் பின் சீரியசான சென்டிமென்ட் காமெடியாக இருக்கும்.

நாங்களே கம்யூட்டர் கம்பெனி வைத்திருப்பதால், எங்க படத்தில் சி.ஜி.க்காக நெறைய ஒர்க் பண்றோம் என உற்சாகமாக பதிலளிக்கிறார்.

ஷில்பா, அனாகா என்று இரண்டு நாயகிகள் அறிமுகம் ஆகின்றனர். பிஜீ ஒளிப்பதிவு அறிமுகம். பொல்லாக் இசை அமைப்பாளராக அறிமுகம் ஆகும் இப்படம் விரைவில் திரைக்கு வர உள்ளது.

 

   
   
   
 

Copyright © 2005 tamilscreen.com  All rights reserved.
Best view under 800 X 600 Resolution with Netscape 4.x or IE 4.x and above version.

Netscape 6 not recommended