NEWS..VIEWS..REVIEWS..NEWS..VIEWS..REVIEWS..NEWS..VIEWS..REVIEWS..NEWS..VIEWS..REVIEWS..NEWS..VIEWS..REVIEWS..NEWS..VIEWS..REVIEWS..NEWS..VIEWS..REVIEWS..NEWS..VIEWS..REVIEWS..NEWS..VIEWS..REVIEWS..NEWS..VIEWS..REVIEWS..NEWS..VIEWS..REVIEWS..NEWS..VIEWS..REVIEWS..NEWS..VIEWS..REVIEWS..NEWS..VIEWS..REVIEWS..NEWS..VIEWS..REVIEWS..NEWS..VIEWS..REVIEWS..NEWS..VIEWS..REVIEWS..NEWS..VIEWS..REVIEWS..NEWS..VIEWS..REVIEWS..NEWS..VIEWS..REVIEWS..NEWS..VIEWS..REVIEWS..

 

Editor:
J.Bismi 

Home

Feedback:
editor@tamilscreen.com
Wednesday, October 14, 2009
       
விமர்சனம் பேட்டி கிசுகிசு ப்ளாஷ்பேக் கட்டுரைகள் பயோடேட்டா
கவர்ச்சீய்படங்கள் குளிர்ச்சிபடங்கள் சின்னத்திரை உலகசினிமா குறும்படங்கள் ஆவணப்படங்கள
       
  Preview

  

 

விகடகவி
நல்ல கருத்தோடு ஒரு நகைச்சுவைப் படம்


ஏபிசி ஸ்டூடியோஸ் என்ற பட நிறுவனம் சார்பில் சி.சரவணன், டி.ஆர்.சேவுகன் இணைந்து தயாரிக்கும் புதிய படம் - விகடகவி. இப்படத்தின் கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்குகிறார் ஜி.கிருஷ்ணன் டி.எஃப்.ட்டி. திரைப்படக்கல்லூரி மாணவரான இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம் என அனைத்து தென்னக மொழி களிலும் இரண்டாயிரம் படங்களுக்கு மேல் சவுண்ட் என்ஜினியராக பணியாற்றியவர். விகடகவி படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகிறார்.
சதீஷ் என்ற புதுமுகம் இப்படத்தில் கதா நாயகனாக நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக நடிப்பதன் மூலம் கதாநாயகியாக அறிமுக மாகிறார் அமலா பால். கேரளாவை சேர்ந்த இவர் விகடகவி படத்தில் நடிக்க ஆரம்பித்த உடனேயே வேறு சில படங்களிலும் கதாநாயகியாக ஒப்பந்த மாகி இருக்கிறார்.
இவர்களுடன் அனைத்து கதாபாத்திரங்களிலும் சினிமாவுக்கு முற்றிலும் புதியவர்கள் நடிக்கிறார்கள். படப்பிடிப்பு நடைபெற்ற பகுதிகளிலேயே கதாபாத்திரத்துக்குப் பொருத்தமான முகங்களை கண்டுபிடித்து நடிக்க வைத்திருக் கிறார் இயக்குநர் ஜி.கிருஷ்ணன்.
விகடகவி என்ற தலைப்பை பார்த்தால் காமெடிப்படம் போன்ற தோற்றம் இருக்கிறதே என்று இயக்குநர் ஜி.கிருஷ்ணனிடம் கேட்டால், கதையின் அவுட்லைனைச் சொல்லி ஆச்சர்யத்தில் ஆழ்த்துகிறார்.
‘ஆடி மாசத்தில குழந்தை பொறந்தால் வீட்டுக்கு ஆகாதுன்னு சொல்வாங்க. ஒரு ஊரில் ஐந்து குழந்தைகள் ஆடி மாசத்தில் பிறக்கின்றன. ஆடியில பொறந்த பசங்களால அந்த ஊரு என்ன பாடுபடுதுங்கிறதுதான் படத்தோட கதை.’
என்ற இயக்குநர் ஜி.கிருஷ்ணன் விகடகவி என்ற தலைப்புக்கான காரணத்தையும் சொல்கிறார்.
‘இந்தப்படத்தில் வினோத், கவிதா, டயானா, கருணா, விருமாண்டி என்ற ஐந்து பேர்தான் மெயின் கேரக்டர்கள். இவர்களில் வினோத் ஹீரோ, கவிதா ஹீரோயின். இந்த ஐந்து கேரக்டர்களின் பெயரின் முதல் எழுத்தைக்குறிக்கும் வகையில்தான் விகடகவி என்ற டைட்டிலை வைத்திருக்கிறேன். மத்தபடி இது வெறுமனே சிரிக்க வைக்கும் காமெடிப்படமல்ல. ஆனால், இயல்பான காட்சியமைப்புகள் மூலம் சிரிக்க வைக்கும் படம்.’
விகடகவி படத்தின் காட்சிகள் மூன்று காலக்கட்டங்களில் நிகழ்வதாக படமாக்கப்பட்டிருக்கிறது. ஐந்தாம் வகுப்பு படிக்கும் சிறுவயதுப் பருவம், பத்தாம் வகுப்பு படிக்கும் ரெண்டுங்கெட்டான் பருவம், கல்லூரியில் படிக்கும் இளைஞர் பருவம் என மூன்று காலக்கட்டத்தை சொல்லும் விகடகவி படத்தில் நடிக்கும் ஐந்து கதாபாத்திரங்களுக்கும் மூன்று பருவத்தில் உள்ள வெவ்வேறு நடிகர்களை நடிக்க வைத்திருக்கிறார். அதே நேரம் மூன்று பருவத்தினருக்கும் முக ஒற்றுமை இருக்க வேண்டும் உறுதியாக இருந்து, அதன்படியே ஆட்களை தேர்வு செய்து நடிக்க வைத் திருக்கிறார் இயக்குநர்.
விகடகவி படத்தின் ஐந்து முக்கிய கதாபாத்திரங்களுக்கும் தனித்தனி அடையாளங் கள் மற்றும் குணாம்சங்களை உருவாக்கி ஒவ்வொரு கதாபாத்திரமும் ரசிகர்களின் நினைவில் நிற்பதுபோல் செய்திருக்கிறார்.
‘வினோத் எதற்குமே அலட்டிக் கொள்ளாதவன். எல்லாவற்றையுமே ஈஸியாக எடுத்துக் கொள்பவன். கவிதாவோ பணக்காரியாக இருந்தாலும் ஏழைகள் மீது அன்பு செலுத்து பவள். பக்கத்து கிளாஸ் டீச்சரிடம் கொடுக்கச் சொல்லி வாத்தியார் கொடுத்த லவ் லட்டரை ஹெட்மாஸ்டரிடம் கொடுத்துவிடுமளவுக்கு டயானா ஞாபக மறதிக்காரி. கருணாவோ.. அவனது காலடியில் வெடிகுண்டே வெடித்தாலும் என்னவோ சத்தம் கேட்குதே என்பதுபோல் ஆமை வேகத்தில் நடக்கும் சரியான தத்தி கேரக்டர். பேரைக்கேட்டாலே நாலு ஊருக்கு கேட்பதுபோல் எதையுமே சத்தமாக பேசக் கூடியவன் விருமாண்டி. இப்படி ஐந்து பேருமே வித்தியாசமான கேரக்டர்களாக இருந் தாலும் ஒருத்தரை ஒருத்தர் விட்டுக்கொடுக்காத நண்பர்கள். இவர்களை வைத்து சுவாரஸ்யமாக ஒரு கதையைச் சொல்லி இருக்கிறேன். படத்தைப் பார்த்துவிட்டு தியேட்டரிலிருந்து வெளியே வரும்போது நிறைவான மனசோடு வருவார்கள். அந்த ளவுக்கு காமெடி எண்டர்டெயின்ட்மென்ட் படமாக விகடகவி இருக்கும்’
என்கிற இயக்குநர் ஜி.கிருஷ்ணன் இத்தனை காமெடி களேபரங்களுக்கிடையில் அருமையான கருத்தையும் வலியுறுத்தி இருக்கிறார். ஆடி மாசத்தில் குழந்தை பிறந்தால் ஆகாது என்ற மூடநம்பிக்கையை முறியடிக்கும்விதமாக காட்சிகள், வசனங் கள் மூலம் மட்டுமின்றி இந்தியாவுக்கு சுதந்திரம் கிடைச்சதே ஆடி மாசத்தில்தான் என்ற பாடல் மூலமும் தன் கருத்தை வலியுறுத்தி இருக்கிறார்.


விகடகவி படத்தில் இடம்பெறும் ஐந்து பாடல்களையும். அற்புதமாக இசையமைத் திருக்கிறார் அறிமுக இசையமைப்பாளர் ரதன். தவிர ஒரு பாடலையும் எழுதி இருக் கிறார். இயக்குநர் ஜி.கிருஷ்ணன் ஒரு பாடலை எழுத, ஏனைய பாடல்களை தமிழமுதன், பரிதி, கருப்பன் ஆகியோர் எழுதியிருக்கிறார்கள்.
ஒளிப்பதிவு மா.பொ.வாணன். படத்தொகுப்பு: பி.சாய் சுரேஷ், நடனம்: தெய்வேந்திரன், இணை தயாரிப்பு: தனகோடி
விகடகவி படத்தின் படப்பிடிப்பு மதுரை, கம்பம், தேனி, திண்டுக்கல் ஆகிய இடங்களில் நடைபெற்றிருக்கிறது.
விரைவில் வெளி வருகிறது விகடகவி.
 

   
 

Copyright © 2005 tamilscreen.com  All rights reserved.
Best view under 800 X 600 Resolution with Netscape 4.x or IE 4.x and above version.

Netscape 6 not recommended