Editor: J.Bismi

 
விமர்சனம் பேட்டி கிசுகிசு ப்ளாஷ்பேக கட்டுரைகள் பயோடேட்டா
கவர்ச்சீய்படங்கள் குளிர்ச்சிபடங்கள் சின்னத்திரை உலகசினிமா குறும்படங்கள் ஆவணப்படங்கள
முதல் பக்கம்

 

 

மறுபடியும் ஒரு காதல்

 



வேதா படத்தைத் தயாரித்த கனெக்ட் ஃபிலிம் மீடியா பட நிறுவனமும், பாலிவுட் சினி புரடக்ஷன்ஸ் யு.கே. லிட் என்ற பட நிறுவனமும் இணைந்து மிகப்பிரம்மாண்டமாகத் தயாரிக்கும் புதிய படம் - மறுபடியும் ஒரு காதல். இப்படத்தின் கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்குநராக அறிமுகமாகிறார் தயாரிப்பாளர்களில் ஒருவரான வாசு பாஸ்கர்.
அனிருத் என்ற புதுமுகம் இப்படத்தில் கதாநாயகனாக அறிமுகமாகிறார். இவர் ஜெய்ஜு என்ற பெயரில் ஏற்கனவே ஹலோ, மயூரம், ஸ்கெட்ச் உட்பட பல மலையாள வெற்றிப்படங்களில் நடித்தவர். மறுபடியும் ஒரு காதல் படத்தின் மூலம் தமிழில் அறிமுகமாகிறார்.
கதாநாயகியாக லண்டனைச் சேர்ந்த ஜோஸ்னா என்ற புதுக்கதாநாயகி நடிக்கிறார். பல வருடங்களுக்கு முன் கவிஞர் வாலி இயக்கிய வடைமாலை என்ற படத்தில் கதாநாயகியாக நடித்த சரோஜாவின் மகள் இவர். ஜோஸ்னாவின் தாயாரான சரோஜா, பிலிம் இன்ஸ்ட்டியூட்டில் ரஜினி, சிரஞ்சீவி ஆகியோருடன் ஒன்றாகப் படித்தவர்.
மறுபடியும் ஒரு காதல் படத்தில் இன்னொரு நாயகியாக வாணி கிஷோர் நடிக்கிறார். கேரளத்தை சேர்ந்த இவர், மலையாளத்தில் பல விளம்பரப்படங்களில் நடித்தவர். பிரபல மாடலான இவர், தமிழில் நடிக்கும் முதல் படம் இது.
மற்றும் சுமன், பானுசந்தர், மயில்சாமி, சிங்கமுத்து ஆகியோரும் நடிக்கும் இப்படத்தில் வானொலி அறிவிப்பாளரான பி.ஹெச்.அப்துல்ஹமீது ஆர்.ஜே.வாகவே நடிக்கிறார்.
வேதா படத்தில் உணர்வுபூர்வமான உண்மைக்கதையை எழுதிய வாசுபாஸ்கர், இந்தப்படத்தில் ஆக்ஷன் மற்றும் காதலுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்ட கதையை கையில் எடுத்திருக்கிறாராம். இளைஞர்களை கவரும் வகையில் உருவாகும் மறுபடியும் ஒரு காதல் படத்தின் கதை மருத்துவக்கல்லூரி பின்னணியில் நிகழ்வதோடு, லண்டனில் தொடங்கி சென்னையில் தொடர்ந்து லண்டனில் முடிவது போல் திரைக்கதை அமைக்கப்பட்டிருக்கிறது.
லண்டனில் இதுவரை யாரும் படமாக்காத லொகேஷன்களில் படப்பிடிப்பு நடைபெறவிருக்கிறது. தவிர ஒரு பாடல் காட்சியை லண்டன் உட்பட ஆறு ஐரோப்பிய நாடுகளில் படமாக்கவும் திட்டமிட்டிருக்கிறார் இயக்குநர் வாசு பாஸ்கர். லண்டன் தவிர சென்னை, பாண்டிச்சேரியிலும் படப்பிடிப்பு நடைபெறுகிறது.
வாலி, நா.முத்துகுமார், கபிலன், வாசுகோகிலா ஆகியோர் பாடல்களை எழுத ஸ்ரீகாந்த்தேவா இசையமைப்பில் ஆறு பாடல்கள் இடம்பெறுகின்றனவாம். ஆறு பாடல்களையுமே மும்பையை சேர்ந்த பிரபல பாடகர்கள், பாடகிகள் பாடவிருக்கிறார்களாம். சந்தோஷ்சுப்பிரமணியம் படத்துக்கு ஒளிப்பதிவு செய்த கண்ணன் ஒளிப்பதிவு செய்கிறார். பருத்திவீரன் படத்துக்காக தேசிய விருது பெற்ற ராஜாமுகம்மது இப்படத்துக்கு படத்தொகுப்பு செய்கிறார்.
இணை தயாரிப்பு: சீமாமேகலை (மலேஷியா)
கதை, திரைக்கதை, வசனம், இயக்கம்: வாசு பாஸ்கர்
தயாரிப்பு :வாசு பாஸ்கர், சரோஜா பாபி

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

   
   
   
   
   
   
   
   
   
   
 

 

 

 

   

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 
   

 

     

Free Site Counter
Free Site Counter

Copyright © 2005 tamilscreen.com  All rights reserved.
Best view under 800 X 600 Resolution with Netscape 4.x or IE 4.x and above version.
Netscape 6 not recommended