|
ரோஜாவனம் படத்தில் அறிமுகமாகி இனிது இனிது காதல் இனிது,
ராமகிருஷ்ணா உட்பட பல படங்களில் நடித்து முன்னணி கதாநாயகர்களில்
ஒருவராக விளங்கும் ஜெய்ஆகாஷ் சில மாதங்களுக்கு முன் மதன் என்ற
படத்தை இயக்குவதாக அறிவித்தார். அதன் பிறகு அப்படம் பற்றி ஒரு
தகவலும் இல்லை. இந்நிலையில், இப்போது காதலன் காதலி என்ற படத்தை
இயக்குவதோடு, கதாநாயகனாகவும் நடித்து வருகிறார். பத்து
தமிழ்ப்படங்களிலும், தெலுங்கில் இருபத்தி மூன்று படங்களிலும்,
கன்னடத்தில் இரண்டு படங்களிலும் நடித்திருக்கும் ஜெய்ஆகாஷ்
நடிக்கும் 36 வது படம் இது.
காதலன் காதலி படத்தில் டெய்ஸி போபண்ணா, நிதி சுப்பையா,
சுஹாசினி ஆகியோர் கதாநாயகிகளாக நடிக்கிறார்கள். இவர்களில் நிதி
சுப்பையா ஃபேர் அண்ட் லவ்லி உட்பட பல விளம்பரப்படங்களில்
நடித்த பிரபல மாடல்! இவர்கள் தவிர கருணாஸ், ராகுல்தேவ், காதல்
சுகுமார், பிரம்மானந்தம், பிரம்மாஜி மற்றும் பலரும் காதலன்
காதலி படத்தில் நடிக்கிறார்கள்.
சந்தியா என்ற வேடத்தில் டெய்ஸி போபண்ணாவும், மீனாட்சி என்ற
வேடத்தில் நிதி
சுப்பையாவும், லட்சுமி என்ற வேடத்தில்
சுஹாஸினியும் நடிக்க, ராஜா என்ற வேடத்தில் ஜெய்ஆகாஷ்
நடிக்கிறார்.
உண்மை காதலுக்காக போராடும் நவீன சீதையாக மீனாட்சி கதாபாத்திரம்
அமைக்கப்பட்டிருக்கிறதாம். ஜெய்ஆகாஷ் ஏற்றிருக்கும்
கதாபாத்திரமும் வித்தியாசமாகவும், ரசிகர்களுக்கு பிடித்தமான
வகையிலும் அமைக்கப்பட்டிருக்கிறதாம். அது மட்டுமல்ல, தான்
இயக்கும் படம் என்பதால் காதலன் காதலி படத்தின் ஒவ்வொரு
கதாபாத்திரத்தையும் சிரத்தை எடுத்து உருவாக்கி வருவதாக
சொல்கிறார் ஜெய்ஆகாஷ்.
காதல், சென்ட்டிமெண்ட், ஆக்ஷன், காமெடி என ஜனரஞ்சகமான படமாக
தயாராகி வரும் காதலன் காதலி படத்தின் படப்பிடிப்பு ஊட்டி,
மூணாறு, திருநெல்வேலி போன்ற ஊர்களில் நடைபெறுகிறது. பாடல்
காட்சிகளை வெளிநாடுகளில் எடுக்கவும் திட்டமிடப்பட்டிருக்கிறது.
கன்னடத்தில் பல வெற்றிப்படங்களைத் தயாரித்த பிரஸ்டீஜ் பிலிம்ஸ்,
ஜெய்ஆகாஷின் திறமையை உணர்ந்து, அவர் இயக்கி நடிக்கும் காதலன்
காதலி
படத்தைத் தயாரிக்க முன் வந்திருக்கிறது. தங்களின் முதல்
தமிழ்ப்படம் மிகப்பெரிய அளவில் இருக்க வேண்டும் என்பதற்காக
செலவைப் பற்றிக் கவலைப்படாமல் காதலன் காதலி படத்தை
பிரம்மாண்டமாக தயாரிக்கவும் திட்டமிடு களத்தில் இறங்கி
இருக்கிறது. வெற்றி கிடைக்கட்டும்!
ஒளிப்பதிவு: ஜாக்ஸி ஜான், ராஜேஷ் யாதவ், செல்வராஜ்
இசை: நந்தன்ராஜ்
படத்தொகுப்பு: எம்.ஆர்.வர்மா
கலை: கமல் ஆர்.
நடனம்: கூல்ஜெயந்த்
பாடல்கள்: சினேகன், கருணாநிதி
சண்டைப்பயிற்சி: நந்து, தவசிராஜ்
தயாரிப்பு: டாக்டர், இப்றாகிம் பாஷா, ரஃபத் மாலிக்
கதை, திரைக்கதை, வசனம், இயக்கம்: ஜெய்ஆகாஷ் |