Editor: J.Bismi
விமர்சனம் பேட்டி கிசுகிசு ப்ளாஷ்பேக் கட்டுரைகள் பயோடேட்டா
கவர்ச்சீய்படங்கள் குளிர்ச்சிபடங்கள் சின்னத்திரை உலகசினிமா குறும்படங்கள் ஆவணப்படங்கள
முதல் பக்கம்

குளிர்ச்சிப்
படங்கள்

மந்த்ரா


கே.வி.எல். இன்னோவேட்டிவ்ஸ் என்ற பட நிறுவனம் தயாரிக்கும் புதிய படம் மந்த்ரா. காதல் அழிவதில்லை படத்தில் டி,ராஜேந்தரால் அறிமுகம் செய்யப்பட்டு தொடர்ந்து காதல் கிசுகிசு, ஆஹா எத்தனை அழகு போன்ற படங்களில் நடித்த சார்மி இப்படத்தில் வித்தியாசமான வேடத்தில் மட்டுமின்றி, மாறுபட்ட தோற்றத்திலும் நடிக்கிறார். தெலுங்குப்பட உலகில் முன்னணி நாயகனாக வலம் வரும் சிவாஜி இப்படத்தில் கதாநாயகனாக நடிக்கிறார்.
இளமை துள்ளும் காட்சிகளுடன் மர்மம் திகில் கலந்த கதை அம்சம் கொண்ட இப்படத்தை ஓஷோ துளசிராம் இயக்குகிறார்.
அதென்ன மந்த்ரா?
''இது வழக்கமான படமல்ல, தியேட்டரில் படம் பார்க்கும் ரசிகர்களை சீட்டின் நுனியில் உட்கார வைக்கும் படு பயங்கரமான திகில் படம். ஆங்கிலப்படங்களை மிஞ்சும் வகையில் படமாக்கி இருக்கிறோம். கண்ணால் காண்பது எல்லாம் உண்மை இல்லை. கண்ணால் பார்க்க முடியாதது எல்லாம் பொய்யும் இல்லை. நாமெல்லாம் கண்ணால் பார்த்திராத ஒரு உண்மையைப் பற்றிய படம்தான் இது.''
என்ற பொழிப்புரை சொல்கிறார் இயக்குநர்.
சென்னை, ஹைதராபாத் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் படப்பிடிப்பு நடத்தப்பட்டிருக்கும் மந்த்ரா படத்தில் நான்கு பாடல் காட்சிகள் இடம் பெறுகின்றன. இவற்றை படமாக்க வித்தியாசமான லொகேஷன்களுக்கு பயணப்பட்டு படப்பிடிப்பு நடத்தியிருக்கிறார்கள்.
நிதின் ரெட்டி தயாரிப்பில் உருவாகி இருக்கும் இப்படத்திற்கு இசையமைத்திருப்பவர் ஆனந்த். பாடல்களை புதிய பாடலாசிரியர் பரிதி எழுத, வசனத்தை திருமதி லலிதா எழுதியிருக்கிறார். கதை, திரைக்கதையை ரவிபிரகாஷ் எழுதியிருக்கிறார்.
சமீப காலமாக தமிழில் திகில் படங்கள் வெற்றியடைந்ததில்லை. அந்த வழக்கத்தை மந்த்ரா உடைக்குமா? பார்க்கலாம்!



 

மேலும்..

 

Free Site Counter
Free Site Counter

Copyright © 2005 tamilscreen.com  All rights reserved.
Best view under 800 X 600 Resolution with Netscape 4.x or IE 4.x and above version.
Netscape 6 not recommended