|
சரத்குமார், பிரபு, கார்த்திக், விஜயகாந்த், விஜய், கமல், அஜித், சூர்யா, தனுஷ்,
ஜெயம் ரவி போன்ற பிரபல நட்சத்திரங்களை வைத்து, அரண்மணை காவலன், மிஸ்டர் மெட்ராஸ்,
ப்ரியமுடன், கோகுலத்தில் சீதை, வீரம் வௌஞ்ச மண்ணு, உன்னிடத்தில் என்னைக்
கொடுத்தேன், உன்னைத் தேடி, உன்னை நினைத்து, அன்பே சிவம், புதுப்பேட்டை, தாஸ்
போன்ற படங்களைத் தயாரித்த பட நிறுவனம் லஷ்மி மூவி மேக்கர்ஸ் இந்தியா லிட்.
இந்நிறுவனம் கடைசியாக தயாரித்த புதுப்பேட்டை, தாஸ் படங்கள் கை கொடுக்காததினால் பல
கோடிகள் நஷ்டம் ஏற்பட்டு சிறிது காலம் படத் தயாரிப்பிலிருந்து விலகி இருந்த லஷ்மி
மூவி மேக்கர்ஸ் இந்தியா லிட். நிறுவனம் மீண்டும் தயாரிப்பில் இறங்கி சிலம்பரசன்
கதாநாயகனாக நடிக்கும் சிலம்பாட்டம் படத்தை தயாரித்து வருகிறார்கள்.
இப்படத்தைத் தொடர்ந்து தங்கள் நிறுவனத்தின் 27வது படமாக ஆட்டநாயகன் என்ற படத்தை
தயாரிக்கிறது லஷ்மி மூவி மேக்கர்ஸ் இந்தியா லிட் நிறுவனம்.
இப்படத்தில் தொட்டால் பூ மலரும் படத்தின் அறிமுகநாயகன் சக்தி கதாநாயகனாக
நடிக்கிறார். துடிப்புள்ள இளைஞனாக நடிக்கும் சக்திக்கு ஜோடியாக பிரபல மலையாள நடிகை
ரம்யா நம்பீசன் நடிக்கிறார். மேலும் நாசர், அனில்மேனன், சந்தானம், லொள்ளுசபா ஜீவா,
அஸ்வினி, ஆர்.சுந்தர்ராஜன், சச்சு, தேவகி மற்றும் பலர் நடிக்க, இயக்குநர்
விக்ரமனிடம் வானத்தை போல படம் முதல் ஆறு படங்களில் உதவியாளராக பணிபுரிந்த
கிருஷ்ணராம் இப்படத்தின் கதை, திரைக்கதை, வசனம், எழுதி இயக்குனராக அறிமுகமாகிறார்.
ஸ்ரீகாந்த் தேவா இசையமைக்க, பாடல்களை எழுதுகிறார் கவிஞர் வாலி. விஜய்மில்டன்
ஒளிப்பதிவு செய்கிறார். ஹர்ஷா படத்தொகுப்பு பணியை கவனிக்க, கலை இயக்கத்தை கர்ம
சிரத்தையுடன் செய்பவர் வித்தேஷ். சண்டைப்பயிற்சி தளபதி தினேஷ்.
செப்டம்பர் முதல் வாரம் கும்பகோணத்தில் தொடங்கப்பட்டு தொடர்ச்சியாக முப்பது
நாட்கள் படப்பிடிப்பு நடைபெற்ற நிலையில், தொடர்ந்து சென்னையிலும் தொடர்கிறது.
காதல், கமெடி, ஆக்ஷன் என அனைத்து தரப்பினர்களையும் கவரும் விதத்தில் ஆட்டநாயகன்
படத்தின் கதையை அமைத்திருக்கிறேன் என்கிறார் இயக்குநர்.
அப்ப வெற்றி நிச்சயம்!?
மேலும்.. |
 |