Editor: J.Bismi
விமர்சனம் பேட்டி கிசுகிசு ப்ளாஷ்பேக் கட்டுரைகள் பயோடேட்டா
கவர்ச்சீய்படங்கள் குளிர்ச்சிபடங்கள் சின்னத்திரை உலகசினிமா குறும்படங்கள் ஆவணப்படங்கள
முதல் பக்கம்

குளிர்ச்சிப்
படங்கள்

ஆதிநாராயணா


சிவாஜி நடித்த தெய்வமகன் படத்தின் தலைப்பில் சமீபத்தில் துவங்கப்பட்ட புதிய படம், இப்போது ஆதிநாராயணா என்ற பெயர் மாற்றத்துடன் படப்பிடிப்பு தொடங்கப்பட்டிருக்கிறது. பாக்ஸ் ஆபிஸ் புரொடக்ஷன்ஸ் என்ற பட நிறுவனத்தின் சார்பில் எஸ்.பாலாஜி தயாரிக்கும் ஆதிநாராயனா படத்தில் கஜன் என்ற புதுமுகம் கதாநாயகனாக அறிமுகமாகிறார்.
அவருக்கு ஜோடியாக நடிப்பது... நம்புங்கள்.. நம்ம மீராஜாஸ்மின்தான்! சில வருடங்களுக்கு முன் பிஸி நடிகையாக இருந்தபோது முன்னணி ஹீரோக்களின் படங்களுக்கே கால்ஷீட் இல்லை என்று சொன்னவர் இப்போது புதுமுக ஹீரோவுக்கு ஜோடியாக நடிப்பது ஆச்சர்யம்தான். மீராஜாஸ்மினிடம் கேட்டால், ''அருமையான கதை. அதனாலதான் ஹீரோ புதுமுகமாக இருந்தாலும் பரவாயில்லை என்று நடிக்க ஒப்புக்கொண்டேன்'' என்கிறார். இவர்களுடன் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார் கருணாஸ். நந்தா, பிதாமகன், ஈ படங்களுக்குப் பிறகு அவருக்கு இந்தப்படத்தில் அசத்தலான வேடம் அமைந்திருக்கிறது என்று பூரிக்கிறார் கருணாஸ்.
ஆதிநாராயணா படத்தில் இரண்டாவது கதாநாயகியாக பெங்களூரை சேர்ந்த மாடல் அழகி யோகிதா அறிமுகமாகிறார். மற்றும் மனோபாலா, விஜய்பாபு, மாணிக்க விநாயகம், காதல் சுகுமார், மயில்சாமி, முத்துக்காளை, நெல்லை சிவா, சங்கராபரணம் ராஜலஷ்மி, குயிலி, ஷோபனா என பெரும் நட்சத்திரக்கூட்டமே நடிக்கிறது. தவிர, ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க ஒரு வி.ஐ.பி. நடிக்க இருக்கிறார்.
ஸ்ரீகாந்த் தேவா இசையமைக்க, செல்வா.ஆர். ஒளிப்பதிவு செய்கிறார். கலை: ஜனா, படத்தொகுப்பு: பி.எம். உதயசங்கர் டி.எஃப்டி., நடனம்: சிவசங்கர், தாரா, 'அஞ்சாதே' புகழ் தினா, சண்டைப்பயிற்சி: 'கில்லி' சேகர், பாடல்கள்: பழனிபாரதி, சினேகன், கபிலன், விவேகா, நிர்வாக தயாரிப்பு: பி.எஸ்.தேவராஜ், தயாரிப்பு: எஸ்.பாலாஜி.
ஆதிநாராயணா படத்தின் கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்குகிறார் அறிமுக இயக்குநர் வெற்றிவேந்தன்.
படத்தின் கதை என்ன ஸார்?
இயக்குநரிடம் கேட்டால், ''சராசரி வாழ்க்கையை தொலைத்துவிட்டதாக நினைக்கும் ஒரு இளைஞன், தன் வாழ்க்கையை சந்தோஷமாக மாற்றிக் கொள்ள முற்படும்போது, எதிர்பாராமல் ஏற்படும் காதலில், சந்திக்க நேரிடும் பிரச்சனைகளின் தொகுப்புதான் கதை.'' என்கிற இயக்குநர் வெற்றிவேந்தன், ''இது ஒரு உண்மைச் சம்பவத்தின் தொடர்போடு புனையப்பட்ட கதை'' என்றும் கூடுதல் தகவல் தெரிவிக்கிறார்.
ஆதிநாராயணா படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு கிழக்கு கடற்கரைச் சாலை மற்றும் பாண்டிச்சேரியில் படமாக்கப்பட்டுள்ளது. புகழ்பெற்ற வரலாற்றுச் சின்னமான ஆலம்பராக்கோட்டையில்
டுவிங்க்கிள் டுவிங்க்கிள்
லிட்டில் ஸ்டாருடா - அட
நீயும் நானும்
மிங்கிளானா சூப்பர்ஸ்டாருடா....
- என்ற பாடல் காட்சிக்கு சிவசங்கர் நடனம் அமைக்க, மீராஜாஸ்மின், கஜன் மற்றும் நடனக் கலைஞர்கள் பங்கேற்க நான்கு நாட்கள் மூன்று கேமராக்களை பயன்படுத்தி படம் பிடித்திருக்கிறார்கள். அப்போது மீராஜாஸ்மின் தந்த ஒத்துழைப்பை கண்டு அவரை பாராட்டதவர்களே இல்லை. மிகச் சிறந்த நடிகையான மீராஜாஸ்மினோடு ஆடத் தயங்கிய அறிமுக நாயகன் கஜனிடம் சகஜமாக பேசி உற்சாகப்படுத்தி அவரை ஆட வைத்ததையும், புதுவை பெரிய மார்க்கெட்டில் பொதுமக்கள் கூட்டத்தினிடையே கருணாஸ் மற்றும் மீராஜாஸ்மினை கஜன் துரத்தும் ஒரு சேஸிங் காட்சியில் எந்த தயக்கமும் இல்லாமல் நடித்ததையும், கொளுத்தும் வெயிலை பொருட்படுத்தாமல் நடித்துக் கொடுத்ததையும் சொல்லிச் சொல்லி பெருமைப்படுகிறார்கள் ஆதிநாராயணா படப்பிடிப்புக் குழுவினர்கள்.
 

மேலும்..

 

Free Site Counter
Free Site Counter

Copyright © 2005 tamilscreen.com  All rights reserved.
Best view under 800 X 600 Resolution with Netscape 4.x or IE 4.x and above version.
Netscape 6 not recommended