|

பொழுதை போக்க சிலர் ஷாப்பிங் செல்வதுண்டு.
சென்னை போன்ற நகரங்களில் போக்குவரத்து நெரிசலில் நீச்சலடித்து வீட்டுக்கு தேவையான
பொருள்களைத் தேடித் தேடி எடுத்து க்யூவில் நின்று பில் போட்டு டெலிவரிக்காகக்
காத்திருந்து, பெற்றுக் கொண்டு வீடு வந்து சேர்வதற்குள் போதும் போதுமென்று
ஆகிவிடுகிறது.
ஷாப்பிங் புறப்படும்போது இந்த உற்சாகம், ஷாப்பிங் முடித்துக் கிளம்பும்போது
இருக்காது. வீடு வந்து சேர்ந்த பிறகு இன்றோடு சரி இனி இந்த தொல்லையே வேண்டாம்
என்கிற ஆயாசம் வந்துவிடுகிறது.
ஜாலிக்காக ஷாப்பிங் செல்பவர்களுக்கே இந்த கதி என்றால்... மற்றவர்களுக்கு...?
வேலைக்குப் போகிறவர்கள் குறிப்பாக கணவன் - மனைவி வேலைக்குப் போகிறவர்கள் படும்பாடு
பெரிய திண்டாட்டம்.

வேலை முடிந்து வீடு திரும்ப இரவு நேரமாகிவிடுகிறது. தாமதமாக வீடு வந்து மளிகைப்
பொருள்கள் வாங்க கடைக்குப் போனால் கடை மூடியிருக்கும் அல்லது மூடப்பட்டுக்
கொண்டிருக்கும். நினைத்த நிதானத்தில் விரும்பிய பொருள்களை ஆற அமரத் தேடி எடுக்க
முடியாது. என்னென்ன நிறுவனப் பொருள்களுக்கு எது மாதிரியான சலுகைகள் என்று விசாரிக்க
நேரமிருக்காது. ஒரே நாள் விடுமுறை ஞாயிற்றுக்கிழமைகளில் போனால் அன்றும் பல
கடைகளுக்கு விடுமுறையாக இருக்கும்.
வீட்டு மளிகைப் பொருள்களை விரும்பியபடி தேர்ந்தெடுத்து நிதானமாக விசாரித்து வாங்க
முடியாத வருத்ததோடு ஒவ்வொரு மாதமும் போகும்.
இப்படிப்பட்டவர்கள் பொழுது போகாதவர்கள் அல்ல. பொழுது போதாதவர்கள் காலில்
சக்கரத்தைக் கட்டிக் கொண்டு உழைப்பவர்கள் நேரத்தை பணமாக்கும் திறமை பெற்றவர்கள்.
இவர்களுக்கெல்லாம் ஒரு வரப்பிரசாதமாக வந்திருப்பது தான் ஸ்டோர்ஸ் ஆன் டோர்ஸ்
முழுக்க முழுக்க ஒரு முழுமையான ஆல்லைன் மளிகைக்கடை நுழைவாயில்.

ஒவ்வொருவர் வீட்டு வாசல் கதவருகே ஒரு பெரிய டிபார்ட்மெண்டல் ஸ்டோர் இருந்தால் என்ன
நிம்மதியும் மகிழ்ச்சியும் ஏற்படுமோ அந்த உணர்வைத் தரும் ஏற்பாடு இது.
சரி.. அது என்ன ஸ்டோர்ஸ் ஆன் டோர்ஸ்?
இது ஒரு வலைதளம் அதாவது வெப்சைட். இதன் முகவரி www.storesondoors.com இம்முகவரியில்
சென்றால் மளிகைப் பொருள்கள் என்னென்ன இருக்கின்றன எவ்வளவு எடை, எவ்வளவு விலை என்று
படத்துடன் பட்டியல் விரியும். வேண்டியதை விரும்பிய எடையில் தேர்வு செய்து ஆர்டர்
செய்தால் மட்டும் போதும். எல்லாப் பொருள்களும் உங்கள் வீடு தேடி வரும்.
இந்த தளத்தில் நுழைந்தவுடன் உங்கள் பெயரில் ஒரு பதிவு செய்து கொள்ள வேண்டும்.
அப்போது உங்கள் பெயருக்கு ஒரு வாடிக்கையாளர் எண் தரப்படும். மறுமுறை அந்த எண்ணைக்
குறிப்பிட்டால் போதும் அது நீங்கள் தான் என்று உறுதி செய்து கொள்ளப்படும். உங்களைப்
பற்றி மீண்டு விவரம் கூறத் தேவையில்லை.
பொதுவாக மற்ற ஆண்லைன் விற்பனைக்கும் இதற்கும் என்ன வேறுபாடு?
மற்ற ஆன் லைன் வியாபாரத்தில் முன் கூட்டியே பணம் செலுத்த வேண்டியிருக்கும். நம்
வங்கிக் கணக்கிலிருந்தோ, டெபிட் மற்றும் கிரெடிட் கார்டுகளிலிருந்தோ பணம் பெற்றுக்
கொண்டுதான் அடுத்த கட்டத்துக்குச் செல்வார்கள். முன்னாடியே பணத்தையும்
கொடுத்துவிடுட வருகிற பொருள் எப்படி, எப்போது வருமோ என்று பதை பதைப்பில்
வாடிக்கையாளர் இருக்க வேண்டியிருக்கும்.
இதில் அப்படியல்ல பொருளைப் பெற்று கொண்டு பிறகுதான் பணம் கொடுக்க வேண்டும்.
பணமாகவோ, கார்டுகள் மூலமாகவோ செலுத்தலாம்.
எப்போது டெலிவரி என்பது வாடிக்கையாளர் விரும்பிய நேரத்தில் முடிவு செய்யப்படும்.
தேவைப்பட்டியல் ஏற்றுக் கொள்ளப்பட்டவுடன் எவ்வளவு தொகை என்பது அவர்களது மொபைல்
போனுக்கு எஸ்.எம்.எஸ். மூலம் தெரிவிக்கப்படும். டெலிவரிக்குப் புறப்பட்ட பின்னும்
தெரிவிக்கப்படும். எதிர்பாராத வகையில் வெளியில் செல்ல நேர்ந்தால் டெலிவிரி நேரத்தை
மாற்றிக் கொள்ளவே இந்த ஏற்பாடு.

தொகை எவ்வளவு என்பது முன்பே தெரிந்து விடுவதால் டெலிவரி ஆள் வந்த பிறகு பணத்தைத்
தேடி - எண்ணி காக்க வைக்க வேண்டிய அவசியமும் இல்லை.
இது முழுக்க முழுக்க வெளிப்படையான அணுகுமுறையாகும்.
இண்டர்நெட் இணைப்பு உள்ளவர்களுக்கு எல்லாம் இது சுலபத்தில் முடிந்து விடுகிறது.
மற்றவர்கள் எப்படி?
இண்டர்நெட் இல்லாவதர்களும் இதன் மூலம் பொருள்களைப் பெறலாம். அவர்கள் 65158534க்குப்
பேசலாம். அல்லது 98409 37766 எண்ணுக்கு Grocery என்று எஸ்.எம்.எஸ். செய்தால்
போதும். நிறுவனத்திலிருந்து தொடர்பு கொண்டு பேசி வேண்டிய பட்டியலைக் கேட்பார்கள்.
மற்றபடி வீடு தேடிப் பொருள்கள் வரும். டெலிவரிக்குப் பின்பே பணம் என அதே
நடைமுறைகள்தான்.
சேவை பற்றிய நிறைகுறை எதுவாயினும் 65158534 எண்ணிலும் www.storesondoors.comலும்
பதிவு செய்யலாம்.
ஸ்டோர்ஸ் ஆன் டோர்ஸ் நிறுவன இயக்குநர் திரு.ஏ.எஸ்.வெங்கட்கிருஷ்ணாவின் நீண்ட நாள்
கனவுத் திட்டம் இது.
இந்த இணைய தளம் தொடங்கும் முன் நிறையவே ஹோம் ஒர்க் மாதிரி ஃபீல்டு ஒர்க்
செய்திருக்கிறார்.
சென்னை நகரில் எந்தெந்த பகுதியில் என்னென்ன பொருள்கள் அதிகமாக விற்பனையாகின்றன,
என்று ஒரு மெகா சர்வே எடுத்திருக்கிறார். அதனடிப்படையில் அந்தந்த பகுதியில் ஸ்டோர்
:ரும்கள் அமைய இருக்கின்றன. முதலில் விருகம்பாக்கம் பகுதியில் தொடங்கி முகப்பேர்
திருவான்மியூர் என்று தொடர இருக்கிறது.
நேர விரயம்
டிராலி தள்ளுவது
பில்லுக்கு க்யூவில் நிற்பது
மாதா மாதம் மளிகைப் பொருள் வாங்க சோர்வடைவது
தள்ளுபடி என்கிற பெரில் கண்ணாமூச்சி ஆடுவது.

இந்த தொல்லைகளிலிருந்து விடுதலை பெறும் நோக்கத்தில் உருவானதே இந்த storesondoors
திட்டம் என்கிறார் வெங்கட் கிருஷ்ணா. தவறான வாக்குறுதிகளுக்கு இடமே இல்லாத
வெளிப்படையான அணுகுமுறை இது.
எல்லா விராண்டுகளிலும் என்னென்ன சலுகைகள், தள்ளுபடிகள் என்கிற ஆஃபர்ஸ் விவரம்
முன்கூட்டியே வாடிக்கையாளர்களுக்குத் தெரிவிக்கப்படுவதால், அவர்கள் அதிக
நிம்மதியும் அடைகிறார்கள்.
வாங்கும் வாடிக்கையாளர்களில் வரும் ஒருவர் தேர்ந்தெடுத்து இணையதளத்தில் இடம் பெறச்
செய்வது, வாடிக்கையாளர்களுக்கும் சமையல் போட்டி பரிசு, ஏழை பள்ளி மாணவர்களின்
கல்விச் சேலவை ஏற்பது, மாணவர்களுக்கு பல்வேறு போட்டிகள் வைத்து பரிசளிப்பது என்று
அடுத்தடுத்த சமூக வேலைத் திட்டங்களும் உள்ளன.
வீட்டிலிருந்தபடியே ஒரு ஜாலியான மனநிறைவான ஷாப்பிங் அனுபவமாக ஸ்டோர்ஸ் ஆன் டோர்ஸ்
இருக்கும்.
ஒரு முறை முயற்சி செய்து பாருங்கள் உங்கள் நீண்ட நாள் ஏக்க பெருமூச்சு நிம்மதிப்
பெருமூச்சாக மாறியிருப்பதை உணர்வீர்கள்.
உங்கள் விருப்பங்களுக்கெல்லாம் விரல் நுனியில் விடை கிடைக்கும்
www.storesondoors.comக்கும் வரலாம் தொலைபேசியில் 65158534க்கு தொடர்பு கொள்ளலாம்.
அல்லது Grocery என்று 9840937766க்கு எஸ்.எம்.எஸ். செய்யலாம்.
மற்றவை நேரில் உங்கள் வீட்டுக் கதவருகில்...
|