NEWS..VIEWS..REVIEWS..NEWS..VIEWS..REVIEWS..NEWS..VIEWS..REVIEWS..NEWS..VIEWS..REVIEWS..NEWS..VIEWS..REVIEWS..NEWS..VIEWS..REVIEWS..NEWS..VIEWS..REVIEWS..NEWS..VIEWS..REVIEWS..NEWS..VIEWS..REVIEWS..NEWS..VIEWS..REVIEWS..NEWS..VIEWS..REVIEWS..NEWS..VIEWS..REVIEWS..NEWS..VIEWS..REVIEWS..NEWS..VIEWS..REVIEWS..NEWS..VIEWS..REVIEWS..NEWS..VIEWS..REVIEWS..NEWS..VIEWS..REVIEWS..NEWS..VIEWS..REVIEWS..NEWS..VIEWS..REVIEWS..NEWS..VIEWS..REVIEWS..NEWS..VIEWS..REVIEWS..

 

Editor:
J.Bismi 

Home

Feedback:
editor@tamilscreen.com
Friday, October 30, 2009
       
விமர்சனம் பேட்டி கிசுகிசு ப்ளாஷ்பேக் கட்டுரைகள் பயோடேட்டா
கவர்ச்சீய்படங்கள் குளிர்ச்சிபடங்கள் சின்னத்திரை உலகசினிமா குறும்படங்கள் ஆவணப்படங்கள
       
  Preview

  

 

புதுமுகங்கள் சந்திரஹாசன் - ஸ்வேதா நடிக்கும்
பயணங்கள் தொடரும்
எல்லை கடந்த காதலைச் சொல்லும் படம்


ஆர்.விஜயலட்சுமி வழங்க, ஸ்ரீசரவண பவ மூவிஸ் பட நிறுவனத்தின் சார்பில் எஸ்.பி.ராமமூர்த்தி மிகப்பிரம்மாண்டமான படைப்பாகத் தயாரிக்கும் புதிய திரைப்படம் பயணங்கள் தொடரும். இப்படத்தின் கதை, திரைக்கதை, வசனம், எழுதி இயக்குகிறார் எல்.பி.ஆர்.ராஜா.
சமீப காலமாக வெற்றிகளைக் குவித்து வரும் யதார்த்தப்படங்களின் வரிசையில் மேலும் ஒரு படமாக பயணங்கள் தொடரும் படமும் இருக்கும். இயக்குநரின் வாழ்க்கையில் நடந்த உண்மைச்சம்பவங்களின் அடிப்படையில் பின்னப்பட்ட இக்கதை, யதார்த்தமாக அமைய வேண்டும் என்பதற்காக ஆந்திரா எல்லையிலும், சித்தூர் பஸ் நிலையத்திலும் படமாக்கப்பட்டிருக்கிறது.
கதாநாயகனாக புதுமுகம் சந்திரஹாசன் நடிக்கிறார். நாயகியாக ஸ்வேதா நடிக்கிறார். இவர் தெலுங்கில் சடுகுடு என்ற படத்தில் நடித்தவர்.
அருவா வேலு என்ற கலக்லான காமெடி வேடத்தில் நடிக்கிறார் கஞ்சாகருப்பு. பூக்காரி வேடத்தில் ஷகீலா நடிக்க, மற்றும் கிஷோர், ஜிதேஷ், கபிலன் ஆகியோர் நடிக்க, கதையின் முக்கிய கதாபாத்திரத்தில் கௌரவ வேடத்தில் நடிக்கிறார் ரஞ்சித்.


பல வருடங்களுக்கு முன் பட்டிதொட்டியெங்கும் கலக்கிய மாமா மாமா மாமா என்ற பாடல் ரீமிக்ஸ் செய்யப்பட்டு, அப்பாடலுக்கு மலேஷியாவை சேர்ந்த ஜெனிஃபர் குத்தாட்டம் ஆடி கவர்ச்சி விருந்து படைத்திருக்கிறார். இப்படத்தின் ஹைலைட்டுகளில் ஒன்றாக இப்பாடல் காட்சி அமைந்திருக்கிறது. திருவிழாவில் நடைபெறும் இப்பாடல் காட்சிக்காக பல லட்சம் செலவில் திருவிழா செட் அமைக்கப்பட்டு படமாக்கப்பட்டிருக்கிறது.
இது தமிழ்நாடு ஆந்திரா இடையே பயணிக்கும் ஒரு தனியார் பேருந்தின் நடத்துநருக்கும், அப்பேருந்தில் தினமும் பயணம் செய்யும் கல்லூரி மாணவிக்கும் இடையில் நடக்கும் காதல் பயணமே இப்படத்தின் கதை. இப்பயணத்தில் எதிர்ப்படும் பிரச்சனைகளை எதிர்கொண்டும், சமாளித்தும் காதல் பயணத்தைத் தொடர்ந்தார்களா? இல்லையா? என்பதை உணர்வுபூர்வமாக சொல்லும் இது எல்லை கடந்த காதலைச் சொல்லும் படம்.
இப்படத்தின் ஒளிப்பதிவு இயக்குநராக சாலை சகாதேவன் பணியாற்றுகிறார். முத்துலிங்கம், நெல்லை பாரதி, வாலிதாசன், தாணுகார்த்திக், மோ. கோதண்டராமன் பாடல்களை எழுத,

இசைப்பொறுப்பை ஏற்றிருக்கிறார் தஷி.
படத்தொகுப்பை எம்.சாய்கிருஷ்ணனும், நடனத்தை எஸ்.எல்.பாலாஜியும், ரமேஷ்ரெட்டியும், சண்டைப்பயிற்சியை இந்தியன் பாஸ்கரும், கலை இயக்கத்தை மோகன மகேந்திரனும் கவனிக்கிறார்கள்.
தயாரிப்பு நிர்வாகம்: தேனி சங்கர்.
தயாரிப்பு: எஸ்.பி.ராமமூர்த்தி
கதை, திரைக்கதை, வசனம், இயக்கம்:
எல்.பி.ஆர்.ராஜா
 

   
 

Copyright © 2005 tamilscreen.com  All rights reserved.
Best view under 800 X 600 Resolution with Netscape 4.x or IE 4.x and above version.

Netscape 6 not recommended