NEWS..VIEWS..REVIEWS..NEWS..VIEWS..REVIEWS..NEWS..VIEWS..REVIEWS..NEWS..VIEWS..REVIEWS..NEWS..VIEWS..REVIEWS..NEWS..VIEWS..REVIEWS..NEWS..VIEWS..REVIEWS..NEWS..VIEWS..REVIEWS..NEWS..VIEWS..REVIEWS..NEWS..VIEWS..REVIEWS..NEWS..VIEWS..REVIEWS..NEWS..VIEWS..REVIEWS..NEWS..VIEWS..REVIEWS..NEWS..VIEWS..REVIEWS..NEWS..VIEWS..REVIEWS..NEWS..VIEWS..REVIEWS..NEWS..VIEWS..REVIEWS..NEWS..VIEWS..REVIEWS..NEWS..VIEWS..REVIEWS..NEWS..VIEWS..REVIEWS..NEWS..VIEWS..REVIEWS..

 

Editor:
J.Bismi 

Home

Feedback:
editor@tamilscreen.com
Friday, July 03, 2009
       
விமர்சனம் பேட்டி கிசுகிசு ப்ளாஷ்பேக் கட்டுரைகள் பயோடேட்டா
கவர்ச்சீய்படங்கள் குளிர்ச்சிபடங்கள் சின்னத்திரை உலகசினிமா குறும்படங்கள் ஆவணப்படங்கள
       
  Latest Updates

  

 
 

விஜய்யின் அரசியல்கட்சி பூச்சாண்டி

எந்த பத்திரிகையைப் புரட்டினாலும் விஜய் அரசியல் கட்சி தொடங்கப் போகிறார் என்ற செய்திதான். கடந்த வருடம் தன் ரசிகர் மன்றத்துக்காக கொடியை அறிமுகப்படுத்திய விஜய், இந்த வருட பிறந்தநாளுக்கு முன் அரசியல் கட்சி தொடங்கப்போவதாக ஒரு பரபரப்பை கிளப்பிவிட்டிருக்கிறார். அரசியலுக்கு வரப்போறீங்களா என்ற மீடியாக்களின் கேள்விக்கு நேரடியாக பதில் சொல்லாமல், என் ரசிகர்களுக்கு ஏதாவது செய்யணும் என்று நழுவல் பதிலை எடுத்துவிட்டிருக்கிறார். அவரது அப்பாவோ இன்றைய தொண்டன் தொண்டன் நாளைய தலைவன் என்கிற ரீதியில் பன்ச் டயலாக் பேசிக்கொண்டிருக்கிறார். உண்மையில் விஜய்க்கு அரசியல் ஆசை இருக்கிறதா? அவருக்கு மிக நெருங்கிய வட்டத்தில் விசாரித்தால்..கிடைத்த தகவல் வேறு. இயல்பிலேயே கூச்சசுபாவம் கொண்ட விஜய்க்கு அரசியல் ஆசை துளியும் இல்லையாம். அவரது அப்பாதான் மகனை கோட்டையில் உட்கார வைத்துவிட வேண்டும் என்ற ஆசையில் அரசியல் கட்சி ஆசையை மகனின் மண்டைக்குள் ஏற்றிக் கொண்டிருக்கிறாராம். அதற்கு இரண்டு காரணங்களை சொல்கிறார்கள் விஜய்க்கு நெருக்கமானவர்கள். சமீபகாலமாக விஜய் நடித்த படங்கள் படு தோல்வியை சந்தித்து வருகின்றன. இதே நீலை தொடர்ந்தால் மகனின் மார்க்கெட் அதளபாதாளத்தை அடைந்துவிடும் என்ற அச்சத்தில் இருக்கிறாராம் விஜய்யின் அப்பா. எனவே அரசியல் ஆசையைக்காட்டினால் ரசிகர்கள் உற்சாகமடைவார்கள். தவிர புதிய ரசிகர்களும் கிடைப்பார்கள். அவர்களை வைத்து பரபரப்பை உண்டாக்கி விஜய்யின் படங்களை ஓட்டிவிடலாம் என்று கணக்குப்போடுகிறாராம். தவிர அரசாங்க இடங்களை குறுக்கு வழியில் வாங்கிக்குவிக்கும் எஸ்.எ.சந்திரசேகரன் அரசியல் கட்சி ஆரம்பிக்கப்போவதாக பூச்சாண்டி காட்டினால் ஆளும்கட்சி பயந்துபோய், கேட்ட சலுகைகளை செய்து கொடுக்கும் என்றும் நினைக்கிறாராம். இப்படியான பொதுநோக்கத்தோடுதான் அரசியல் கட்சி அறிவிப்பு விஜய் தரப்பிலிருந்து வந்திருக்கிறது.  மக்களே உஷாரா இருங்கப்பா. ஒரு கேப்டன் பண்ற ரவுசே தாங்க முடியலை.. இந்த கொடுமை போதாது என்று இளயை தளபதி வேறயா? நாடு தாங்காதுப்பா,

   
 

Copyright © 2005 tamilscreen.com  All rights reserved.
Best view under 800 X 600 Resolution with Netscape 4.x or IE 4.x and above version.

Netscape 6 not recommended