NEWS..VIEWS..REVIEWS..NEWS..VIEWS..REVIEWS..NEWS..VIEWS..REVIEWS..NEWS..VIEWS..REVIEWS..NEWS..VIEWS..REVIEWS..NEWS..VIEWS..REVIEWS..NEWS..VIEWS..REVIEWS..NEWS..VIEWS..REVIEWS..NEWS..VIEWS..REVIEWS..NEWS..VIEWS..REVIEWS..NEWS..VIEWS..REVIEWS..NEWS..VIEWS..REVIEWS..NEWS..VIEWS..REVIEWS..NEWS..VIEWS..REVIEWS..NEWS..VIEWS..REVIEWS..NEWS..VIEWS..REVIEWS..NEWS..VIEWS..REVIEWS..NEWS..VIEWS..REVIEWS..NEWS..VIEWS..REVIEWS..NEWS..VIEWS..REVIEWS..NEWS..VIEWS..REVIEWS..

 

Editor:
J.Bismi 

Home

Feedback:
editor@tamilscreen.com
Saturday, July 04, 2009
       
விமர்சனம் பேட்டி கிசுகிசு ப்ளாஷ்பேக் கட்டுரைகள் பயோடேட்டா
கவர்ச்சீய்படங்கள் குளிர்ச்சிபடங்கள் சின்னத்திரை உலகசினிமா குறும்படங்கள் ஆவணப்படங்கள
       
  Latest Updates

  

 

ஹாலிவுட்டில் ஸ்டார்ட் கட் சொல்லும்
லேகா ரத்னகுமார்

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

அமெரிக்காவில் படம் எடுத்துவிட்டு ஹாலிவுட்டில் படம் எடுத்ததாக சொல்லும் சினிமாக்காரர்களை பார்த்திருக்கிறோம். சின்னத்திரை மற்றும் விளம்பரப்பட இயக்குநர் லேகா ரத்னகுமார் இந்த ரகமில்லை. உண்மையிலேயே ஹாலிவுட்டில் தமிழ்ப்படம் ஒன்றை எடுக்க இருக்கிறார். அதற்காக அண்மையில் ஹாலிவுட் சென்று திரும்பியிருக்கும் லேகா ரத்னகுமார் அங்குள்ள தொழில்நுட்பக் கலைஞர்களிடம் முதல்கட்டப் பேச்சு வார்த்தைகளை நடத்திவிட்டு திரும்பியிருக்கிறார்.

அது மட்டுமல்ல, ஹாலிவுட்டில் பிரபலமான சன்செட் லொகேஷன் கம்பெனியை ஒப்பந்தம் செய்து, அவர்கள் முலம் ஹாலிவுட்டில் எங்கெங்கு படப்பிடிப்பு நடத்துவது என்பதையும் இறுதி செய்துவிட்டாராம்.  ஹாலிவுட்டில் உள்ள சன்செட் பெவர்லி ஹில்ஸ், யுனிவர்ஸல் ஸ்டுடியோ மற்றும், நியூயார்க், லாஸ்வேகாஸ் போன்ற இடங்களிலும் படப்பிடிப்பை நடத்தத் திட்டமிட்டிருக்கும் லேகா ரத்னகுமார்,  ஹாலிவுட்டில் பிரபலமான கெல்கோநாகரா என்ற பெண் ஒளிப்பதிவாளரையும் புக் பண்ணி இருக்கிறார். ஜப்பானைச் சேர்ந்தவரான இவர் ரெட்ஒன் கேமராவைக் கையாள்வதில் ஸ்பெஷலிஸ்ட்டாம்.

படப்பிடிப்பை மட்டுமல்ல, படத்தின் போஸ்ட் புரடக்ஷன்ஸ் பணிகளையும் ஹாலிவுட்டிலேயே செய்ய திட்ட மிட்டிருக்கிறார் லேகா ரத்னகுமார். அதற்கான நிறுவனத்தை விரைவில் இறுதி செய்ய இருக்கிறாராம்.

கதை, வசனம், பாடல்களை சித்ரலகோ எழுத, திரைக்கதை அமைத்து, இசையமைத்து இயக்குகிறார் லேகா ரத்னகுமார்.

இந்தப்படத்தின் கதாநாயகன், கதாநாயகி மற்றும் முக்கிய கதாபாத்திரங்களில் திறமைமிக்க புதுமுகங்களை நடிக்க வைக்க திட்டமிட்டிருக்கிறாராம் லேகா ரத்னகுமார். உங்களுக்கு நடிக்க ஆசை யிருந்தால் நீங்கள் கூட முயற்சி செய்யலாம்.  உங்களின் திரையுலகக் கனவை நனவாக்குவதற்காகவே லேகா ரத்னகுமாரின் இமெயில் முகவரியை தருகிறோம்.  முயற்சி செய்யுங்கள். ஆல் த பெஸ்ட்.  office@lekhaads.com

தமிழ்சினிமாவில் ஒரு தொழில்நுட்பப் புரட்சியை ஏற்படுத்தவிருக்கும் இப் படத்தை தயாரிக்க, லேகா ரத்ன குமாருடன் பிரபல படநிறுவனங்கள் கைகோர்க்க இருக்கின்றனவாம்.

ஆல் த பெஸ்ட் மிஸ்டர் லேகா ரத்னகுமார்.

Related Articles-

குறைந்த செலவில் உலகத்தரமான இசை

பின்னணி இசையின் விலை ஜஸ்ட் 50 ஆயிரம்

 

Copyright © 2005 tamilscreen.com  All rights reserved.
Best view under 800 X 600 Resolution with Netscape 4.x or IE 4.x and above version.

Netscape 6 not recommended