|
ஸ்ரீ கிரியேஷன்ஸ் பெருமையுடன் வழங்கும் முதல் தயாரிப்பான நல்வரவு எனும்
திரைப்படத்தை தயாரித்துள்ளது.

இதில் அறிமுக நாயகன் வேணுசந்தர் கதாநாயகனாகவும், கதாநாயகியாக ரிச்சா பல்லோட்
நடிக்கிறார்கள். மதுமிதா, நீபா மற்றும் முற்றிலும் மாறுபட்ட வேடத்தில் சம்பத்
நடிக்கிறார். இவர்களுடன் தலைவாசல் விஜய், கலைராணி, அலெக்ஸ், அம்மு மற்றும் முன்னணி
நடிகர், நடிகைகள் நடிக்கின்றனர். இப்படத்தில் நகைச்சுவை காட்சிகளில் நடிகர் விவேக்
அசத்தியுள்ளார், இப்படத்தில் மொத்தம் 5 பாடல்கள் இடம் பெறுகிறது.
இப்படபிடிப்பு சென்னை அதன் சுற்றுப்புறங்கள் ஹைதராபாத்தில் உள்ள ராமோஜிராவ்
ஸ்டுடியோ மற்றும் போல்கொண்டா மலைக்கோட்டை இவ்வனைத்து இடங்களிலும் பாடல் காட்சிகள்,
சண்டைக் காட்சிகள், சேசிங் காட்சிகள் என படப்பிடிப்பு நடத்தப்பட்டது.
ஏவி.எம். ஸ்டுடியோ மற்றும் ஹைதராபாத்தில் உள்ள ராமோஜிராவ் ஸ்டுடியோவில் பிரமாண்டமான
செட்டுகள் போட்டு படப்பிடிப்பு நடத்தப்பட்டது.

சொக்கி சொக்கி நீ போட்ட கொக்கி, லக்கி லக்கி ரொம்ப லக்கி என்ற பா.விஜய் இயற்றியப்
பாடலுக்கு இப்படத்தின் இயக்குநர் ஏ.பாலசூர்யா தன் சொந்த குரலில் பாடியிருக்கிறார்.
இதுவரை எந்தப் படத்திலும் நடிக்காத கதாபாத்திரத்தில் நடித்துள்ள கலைராணி
இப்படத்தில் சவ ஊர்வலத்தின் முன்பு நடனம் ஆடும் பெண்ணாக பாத்திரமேற்று யூனிட்டில்
உள்ள அனைவரையும் அச்த்தி தனி முத்திரை பதித்திருக்கிறார்.
இப்படத்தின் கதாநாயகன் வேணுசந்தர் சண்டை காட்சியின் போது நிஜமாக காயப்பட்டு இரத்தம்
சொட்டியபோது அதை பொருட்படுத்தாது நடித்துக் கொடுத்தார்.
மேலும் கதாநாயகன் வேணுசந்தர் சண்டை காட்சியில் 40 அடி உயரத்திலிருந்து டூப் போடாமல்
குதித்து அனைவரையும் மிரள வைத்து சண்டை பயிற்சியாளர் பாராட்டைப் பெற்றார்.
கழைக்கூத்தாடியாக நடிக்கும் விவேக் பப்பிலஹரி தம்பி மப்புலஹரி எனப் போலியான
இசையமைப்பாளராக வந்து வயிறு குலுங்க சிரிக்க வைக்கிறார்.

கோல்கொண்டா மலை கோட்டையில் ஒரு பாடலுக்கு 300 துணை நடிகர்கள் 20 டான்சர்களும்
கலந்து கொண்டு பிரம்மாண்டமான பாடல் காட்சி முடிக்கப்பட்டது.
இப்படத்திற்கு இசை ஆத்திஷா ஒபிப்பதிவு - ஆதி, பாடல்கள் பிறைசூடன், பா.விஜய், நடனம்
- சதீஷ், காதல் கந்தாஸ், எடிட்டர் - கண்ணதாசன், கலை - மோகன், சண்டை பயிற்சி -
கிரேட் செல்வா, மக்கள் தொடர்பு - எஸ்.செல்வரகு, ஸ்டில்ஸ் - பூபதி, டிசைனர் -
வினயன், இப்படத்திற்கு கதை, திரைக்கதை, வசனம் எழுதி ஏ.பாலசூர்யா இயக்குகிறார். இவர்
பல முன்னணி இயக்குநரிடம் உதவி இயக்குனராக பணியாற்றியவர்.
எல்லா பட்ட படப்பிடிப்புகளும் முடிவடைந்த நிலையில் உள்ள இத்திரைப்படம்
வெள்ளித்திரையில் நல்வரவாக விரைவில் வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது.
கதை, திரைக்கதை, வசனம், இயக்கம் - ஏ.பாலசூர்யா, தயாரிப்பு - ஸ்ரீகிரியேஷன்ஸ்.
 
|