|

சூப்பர்குட் பிலிம்ஸ் பிரைவேட் லிட், ஆர்.பி.சௌத்ரி நல்லாசியுடன் விஜய் பிலிம்ஸ்
என்ற பட நிறுவனம் சார்பில் கே.பிரபாகர், ஆர்.கிருஷ்ணா மிகப்பிரம்மாண்டமாகத்
தயாரிக்கும் புதிய படம் மருதாணி.
இதுதான்டா போலீஸ். எவனா இருந்தா எனக்கென்ன, உடம்பு எப்படி இருக்கு என தொடர்ந்து
ஆக்ஷன் வேடங்களில் நடித்து வரும் டாக்டர்.ராஜசேகர் முதன்முறையாக தங்கை மீது கொண்ட
பாசத்துக்காக உருகும் அண்ணன் வேடத்தில் இப்படத்தில் நடிக்கிறார். மற்றொரு
கதாநாயகனாக ஜெய் ஆகாஷ் நடிக்கிறார்.

டாக்டர்.ராஜசேகரின் பாசத்துக்குரிய தங்கையாக மீராஜாஸ்மின் நடிக்கிறார்.
டாக்டர்.ராஜசேகருக்கு ஜோடியாக ஆர்த்தி அகர்வால் நடிக்கிறார்.
மற்றும் மயில்சாமி, ஆர்த்தி, பயில்வான் ரங்கநாதன், ஹேமா சௌத்ரி ஆகியோரும்
நடிக்கிறார்கள்.
சிவாஜி கணேசனுக்கு பாசமலர், ரஜினிக்கு முள்ளும் மலரும், விஜய்க்கு திருப்பாச்சி
படங்கள் அமைந்தது போல், டாக்டர் ராஜசேகருக்கு மருதாணி படம் அமையும் என்பது
நிச்சயம். அது மட்டுமல்ல, செண்ட்டிமெண்ட்காட்சிகள் நிறைந்த மருதாணி படம் அவரது
திரையுலக வாழ்க்கையில் முக்கியமான படமாக இருக்கும். அப்பா, மகன் என இரட்டை
வேடங்களில் மாறுபட்ட நடிப்பை வெளிப்படுத்தியிருப்பதோடு, பல காட்சிகளில் கண்
கலங்கவும் வைத்திருக்கிறார்.
தங்கையின் நல்வாழ்வுக்காக நிஜ வாழ்க்கையில் எந்தவொரு
அண்ணனும் செய்யாத தியாகங்களை செய்து, தான் எற்ற வேடத்துக்கு வலிமையையும்,
அழுத்தத்தையும் கொடுத்திருக்கிறார்.
அவரது தங்கையாக நடிக்கும் மீராஜாஸ்மினுக்கும் மருதாணி படம் சிகரமாக
அமைந்திருக்கிறது. பாசமலர் படத்தில் நடித்தபோது சாவித்ரிக்குக் கிடைத்ததுபோல்,
கிழக்குச் சீமையிலே படத்தில் நடித்தபோது ராதிகாவுக்கு கிடைத்ததுபோல் இந்தப்படத்தில்
மீராஜாஸ்மினுக்கு மிகப்பெரிய பெயர் கிடைப்பது நிச்சயம்.
டாக்டர் ராஜசேகருக்கு ஜோடியாக நடிக்கும் ஆர்த்திஅகர்வாலும் மருதாணி படத்தில் தான்
ஏற்ற வேடத்தில் சிறப்பாக நடித்திருக்கிறார். பாடல் காட்சிகளில் வழக்கம்போல்
கவர்ச்சியாய் நடித்து இளைஞர்களை கிறங்கடித்திருக்கிறார்.

மருதாணி படத்தில் ஹேமாசௌத்ரி என்ற நடிகை சூரியகாந்தம் என்ற வில்லியாக
நடித்திருக்கிறார். படையப்பா படத்தின் நீலாம்பரி, தூள் படத்தின் சொர்ணாக்கா ஆகிய
வேடங்களை மிஞ்சுகிற வகையில் இவரது வேடம் அமைக்கப்பட்டிருக்கிறது.
பெண்களைக்கவரும் வகையில் செண்ட்டிமெண்ட் காட்சிகளைக் கொண்ட படமாக இருந்தாலும்,
ஒவ்வொரு காட்சிகளும் படு பிரம்மாண்டமானமுறையில் படமாக்கப்பட்டிருக்கிறது. குறிப்பாக
ஒரு பாடல்காட்சி வெளிநாட்டில் பெரும் பொருட்செலவில், ஏராளமான வெளிநாட்டு அழகிகளுடன்
டாக்டர் ராஜசேகர், ஆர்த்திஅகர்வால் ஆடிப்பாடுவதுபோல் படமாக்கப்பட்டிருக்கிறது.
ஒரு சண்டைக்காட்சி கரும்பு பேக்டரியில் பிரம்மாண்டமானமுறையில்
படமாக்கப்பட்டிருக்கிறது. பார்ப்பவர்களை பிரமிக்க வைக்கும் இந்த சண்டைக்காட்சி
மருதாணி படம் வெளியாகும்போது பரபரப்பாக பேசப்படுவது நிச்சயம்.
மருதாணி என்ற தலைப்புக்கு ஏற்ப படத்தில் மருதாணிக்கு முக்கியத்துவம்
கொடுக்கப்பட்டிருக்கிறது.
இப்படத்தின் க்ளைமாக்ஸ் காட்சி மிகப்பெரிய ஹைலைட்டாக மட்டுமல்ல, தாய்மார்களை கதறியழ
வைக்கும்படி அமைக்கப்பட்டிருக்கிறது. இப்படத்தை பார்த்துவிட்டு வெளியே வரும்
தாய்மார்கள் மருதாணி படத்தை இன்னொரு நல்லதங்காள் என்று கூறுவார்கள்.

கதை: சாய்பிரகாஷ்
வசனம்: பிரகாஷ்
படத்தொகுப்பு: வி.ஜெய்சங்கர்
கலை: குமார்
பாடல்கள்: பிறைசூடன், சாம்சன், அபிமான்
இசை: எஸ்.ஏ.ராஜ்குமார்
ஒளிப்பதிவு: அகிலன்
சண்டைப்பயிற்சி: கனல் கண்ணன்
நடனம்: கல்யாண், தாரா, அசோக்ராஜ், கிருஷ்ணாரெட்டி
திரைக்கதை, இயக்கம்:
வி.ஆர். பிரதாப்
தயாரிப்பு:
கே.பிரபாகர், ஆர்.கிருஷ்ணா
|