|

ஜெய்ராம் கிரியேஷன்ஸ் சார்பில் ஜெ.ரவி தயாரிக்கும் படம் மகாராஜா. நாட்டில் இன்று
இளைய தலைமுறைக்கும், மூத்த தலைமுறைக்குமிடையே பனிப்போராக நடந்து கொண்டிருக்கும்
முக்கியமான பிரச்சனையை மையமாக வைத்து எடுக்கப்படும் இப்படத்தில் சத்யாவும், நாசரும்
நாயகர்களாக நடிக்க அஞ்சலியும், அனிதாவும் நாயகிகளாக நடிக்கின்றனர்.
இவர்களுடன் கருணாஸ் முக்கியமான வேடத்தில் நடிக்க சரண்யா, எம்.எஸ்.விஸ்வநாதன், கோவை
சரளா, வெ.ஆ.மூர்த்தி பயில்வான் ரங்கநாதன் என்று பெரும் நட்சத்திரப்பட்டாளமே
நடிக்கிறது.
அத்துடன் தெலுங்கு பட உலகின் முன்னனி காமெடி நடிகரான எம்.எஸ்.நாராயணன்
மற்றும் தெலுங்கு கதாநாயகனான சந்தோஷ்பவன் ஆகியோரும் இப்படத்தின் மூலம் தமிழுக்கு
அறிமுகம் ஆகவுள்ளனர்.
அனைத்து வயதினரையும் கவரக் கூடிய பல அம்சங்களுடன் வளர்ந்து கொண்டிருக்கும்
இப்படத்திற்காக சமீபத்தில் ஏ.வி.எம்.ஸ்டுடியோவில் வைரபாலனின் கலை வண்ணத்தில்
மிகுந்த பொருட்செலவில் அமைக்கப்பட்ட அரங்கில் படமாக்கப்பட்ட பாடல் அனைவரையும்
குதூகலத்தில் ஆழ்த்தியது.

இதுவரை ஏற்றிராத வித்தியாசமான பாத்திரத்தில் இப்படத்தில் நடித்துக் கொண்டிருக்கும்
நாசர், அல்ட்ரா மாடர்ன் இளைஞனாக அனிதாவுடன் ஆடிப்பாடி கலக்கியுள்ள இப்பாடலை டாக்டர்
கிருதியா எழுத, மேற்கத்திய இசையும், கர்நாடக இசையும் கலந்து புதுமையான இசையமைப்பின்
மூலம் பாடலுக்கு புதுவடிவம் கொடுத்து அசத்தியுள்ளார் இசையமைப்பாளர் டி.இமான்.
லட்சுமிபதியின் ஒளிப்பதிவில் புதுமையான நடனத்தை அமைத்து இப்பாடலுக்கு
மெருகேற்றியுள்ளார் நடன இயக்குநர் கல்யாண். ‘அரே தம்மரே தம்’ என்று தொடங்கும்
இப்பாடல் படப்பிடிப்பின்போது படப்பிடிப்பு குழுவினர் அனைவரையும் ஆட்டம் போட வைத்து
ஏ.வி.எம். அரங்கத்தையே அதிரச் செய்துள்ளது. எம்.அசோக்குமார், எச்.ஜெகன் இணை
இயக்கத்தில், செந்திலின் தயாரிப்பு மேற்பார்வையில், வி.விஜயலட்சுமணன் தயாரிப்பு
நிர்வாகத்தை கவனிக்க, தயாரிப்பில் உறுதுணையாக இருப்பவர் ராமையா ராஜா. நடிகர்
அர்ஜூனின் உதவி இயக்குனரான டி.மனோஹரனின், கதை, திரைகதை, வசனம், இயக்கத்தில் வேகமாக
வளர்ந்து கொண்டிருக்கும் இந்த மகாராஜா மிக விரைவில் உங்களை மகிழ்விக்க வலம் வரப்
போகிறார்.

இசை: டி.இமான்
ஒளிப்பதிவு: வி.லட்சுமிபதி
கலை: வைரபாலன்
படத்தொகுப்பு: பி.சாய்சுரேஷ்
சண்டைப்பயிற்சி: பவர்ஃபாஸ்ட்
நடனம்: கல்யாண், தினா
பாடல்கள்: நா.முத்துகுமார், பா.விஜய், சினேகன், யுகபாரதி, விவேகா, டாக்டர் கிருதியா
இணை இயக்கம்: எம்.அசோக்குமார், ஹெச்.ஜெகன்
தயாரிப்பு மேற்பார்வை: எம். செந்தில், தயாரிப்பு நிர்வாகம்: வி. விஜயலட்சுமணன்
தயாரிப்பில் உறுதுணை: ராமையா ராஜா
தயாரிப்பு: ஜெ.ரவி
கதை, திரைக்கதை, வசனம், இயக்கம்:
டி.மனோஹரன்
|