|
H2B
ஸ்டுடியோஸ நிறுவனத்தின்
தலைவர் சக்ரவர்த்தி தயாரிக்கும் படம்,
கையெழுத்து. ஷான்குமார் நடிக்க மோகமுள் அபிஷேக் படத்தை இயக்குகிறார். இவர்கள்
இணைந்து இதற்குமுன் உருவாக்கிய படம், கதை. அந்தப் படம் வெளிவரும் முன் அதே டீம்
கையெழுத்து படத்தை தொடங்கியிருக்கிறது.
சார் பதிவாளர் அலுவலகத்தில்
பணத்துக்காக பொய் கையெழுத்து போடும் இளைஞனை பற்றிய கதையாம். ரொமாண்டிக் காமெடியாக
படத்தை உருவாக்க திட்டமிட்டுள்ளனர்.
கார்ப்பரேட் நிறுவனங்கள் இதுவரை
செய்த தவறுகளை ஆராய்ந்து, அந்த தவறுகள் இல்லாமல் படமெடுக்க வந்திருப்பதாக கூறினார்
சக்ரவர்த்தி. இந்த வருடத்தில் மேலும் சில படங்களை தயாரிக்க
அவர் திட்டமிட்டுள்ளார்.
ஒரு
படம் முடிவதற்குள்ளாகவே முட்டிக்கொள்ளும் இயக்குனர் - நடிகர்கள் மத்தியில்
இரண்டாவது முறையாகவும் இணைகிறது அபிஷேக் - ஷான்குமார் கூட்டணி.
கதை படம் மூலம் தமிழ்த்திரையுலகில் அறிமுகமாகும் ஷான்குமார் சாப்ட்வேர் இன்ஜினியர்.
இவரை கதாநாயகனாக அறிமுகப்படுத்துகிறார் அபிஷேக். சின்னத்திரையில் பிரபல
நட்சத்திரமாக திகழும் அபிஷேக் கதை மூலம் இயக்குனராகியுள்ளார்.
இப்படத்தை தொடர்ந்து இரண்டாவதாக இணைகின்றார்கள் இருவரும். ஹெச்டூபி ஸ்டூடியோஸ்
சார்பில் ஒய்.சக்கரவர்த்தி தயாரிக்கும் அப்படத்திற்கு கையெழுத்து என
பெயரிடப்பட்டுள்ளது.
ரொமாண்டிக் காமெடியாக உருவாகவிருக்கும் கையெழுத்தில் ஷான்குமார் ஜோடியாக நடிக்கும்
நடிகை தேர்வு நடந்து வருகிறது. நாயகன் படத்திற்கு ஒளிப்பதிவு செய்துள்ள அபுஷா
ஒளிப்பதிவு செய்கிறார். இசைப்புயல் ஏ.ஆர்.ரஹமானிடம் பல வருடங்களாக பணிபுரிந்துள்ள
பால்ஜே இப்படத்திற்கு இசையமைக்கிறார்.
|