NEWS..VIEWS..REVIEWS..NEWS..VIEWS..REVIEWS..NEWS..VIEWS..REVIEWS..NEWS..VIEWS..REVIEWS..NEWS..VIEWS..REVIEWS..NEWS..VIEWS..REVIEWS..NEWS..VIEWS..REVIEWS..NEWS..VIEWS..REVIEWS..NEWS..VIEWS..REVIEWS..NEWS..VIEWS..REVIEWS..NEWS..VIEWS..REVIEWS..NEWS..VIEWS..REVIEWS..NEWS..VIEWS..REVIEWS..NEWS..VIEWS..REVIEWS..NEWS..VIEWS..REVIEWS..NEWS..VIEWS..REVIEWS..NEWS..VIEWS..REVIEWS..NEWS..VIEWS..REVIEWS..NEWS..VIEWS..REVIEWS..NEWS..VIEWS..REVIEWS..NEWS..VIEWS..REVIEWS..

 

Editor:
J.Bismi 

Home

Feedback:
editor@tamilscreen.com
Friday, October 30, 2009
       
விமர்சனம் பேட்டி கிசுகிசு ப்ளாஷ்பேக் கட்டுரைகள் பயோடேட்டா
கவர்ச்சீய்படங்கள் குளிர்ச்சிபடங்கள் சின்னத்திரை உலகசினிமா குறும்படங்கள் ஆவணப்படங்கள
       
  Preview

  

 

திறமைக்கு ஒரு மேடை



தமிழ் திரையுலகில்,  திறமைக்கு பஞ்சமில்லை. ஆனால் அந்த திறமைகளுக்கு சரியான மேடை அமைவதில்லை என்பது ஒரு பிரச்சனை.

இன்னொரு பக்கம், புதிய படம் தொடங்குபவர்கள் தங்களின் படத்திற்கு ஹீரோயின் தேடி அலையவேண்டிய அவலமும் தொடர்கிறது. முரண்பாடான இவ்விருவிஷயங்களுக்கும் தீர்வை கண்டு பிடித்திருக்கிறார் மனோரஞ்சன். மேலே சொன்ன இரண்டு பிரச்சனைகளுக்கும் தீர்வாக இவர் தொடங்கிய இணையதளம்தான் http://www.vfindu.com

 

திரையுலகில் நடப்பது என்ன? திறமையாளர்கள் முடங்கிக் கிடக்க, அரைவேக்காடுகள் எல்லாம் அதிர்ஷ்டக் காற்றில் கோபுரத்தில் ஏறிவிடுகிறார்கள். காரணம்... திறமைசாலிகளும், அவர்களைத் தேடிக் கொண்டிருப்பவர்களுக்குமான இடைவெளிதான். இந்த இடைவெளி இனி இருக்காது. வி ஃபைன்ட்யு இருதரப்புக்கும் சரியான களமாக அமைந்திருக்கிறது.

முழுக்க முழுக்க இலவச சேவையாக இந்த தளத்தை துவக்கியிருக்கிறார், மனோரஞ்சன். இவர்தான் இந்த வெப்சைட்டின் நிறுவனர். அடிப்படையில் எம்.பி. பட்டதாரியான இவர், உலகம் முழுவதும் சுற்றி வந்து இதை உருவாக்கிக் கொண்டிருக்கிறார். வெவ்வேறு நாடுகளில் கிளை அலுவலகங்களையும் உருவாக்கி வைத்திருக்கிறாராம்.அடிப்படையில் இவர் ஒரு விளம்பரப்படத் தயாரிப்பாளரும் கூட. நியூஸிலாந்து குடியுரிமைப் பெற்ற ஒரு இந்தியர்.

இந்த தளத்தை ஆரம்பித்ததன் பின்னணி என்ன? திறமைசாலிகளுக்கு இது எந்த அளவுக்கு பயன்படும்?

திறமையாளர்களின் சந்தை என்றே இதை அழைக்கலாம் என்று பேச ஆரம்பிக்கிறார் மனோரஞ்சன்.

"எந்தத் துறையில் திறமைசாலியாக இருந்தாலும், இந்த வலைதளத்துக்குள் தன்னைப் பதிவு செய்து கொள்ளலாம். நடிப்பு, இயக்கம், தொழில் நுட்பம், மாடலிங், மேஜிக், மியூசிக், டான்ஸ், மற்றும் கலை சார்ந்த எந்த துறையிலும் உள்ள திறமைசாலிகள் இதில் தங்களை இணைத்துக் கொள்ளலாம். வெறும் போட்டோகிராப் மட்டுமே இடம் பெற்றால் போதும் என்றில்லாமல் இதில் வீடியோவையும் இணைத்துள்ளோம். தங்கள் திறமைகளை வீடியோவாக பதிவு செய்தும் இதில் இடம் பெற வைக்கலாம்.

 

அது மட்டுமல்ல, கேரளா போன்ற இயற்கை எழில் கொஞ்சும் பகுதிகளில் இருப்பவர்கள் தங்களுக்கு சொந்தமான இடங்களையோ, வீடுகளையோ வாடகைக்கு தர விருப்பம் இருந்தாலும் புகைப்படம்/ வீடியோ இணைப்புடன் இதில் பதிவு செய்யலாம். விடுமுறையை கழிக்க இந்தியா வர விரும்பும் வெளிநாட்டினர் கூட, எங்கள் வெப்சைட் மூலம் இவர்களை தொடர்பு கொண்டு தங்கள் தங்குமிடத்தை பதிவு செய்து கொள்ளலாம்.அட குடிசை வீடாக இருந்தாலும் பரவாயில்லை. அதற்கும் கணிசமான வாடகை கிடைக்க வாய்ப்புள்ளது.உதாரணத்திற்கு தன்னிடம் ஒரு புகழ் பெற்ற தலைவர் பயன்படுத்திய ஏதோ ஒரு பொருள் இருப்பதாக வைத்துக் கொள்வோம். அதை விற்க நினைத்தால் கூட அந்த பொருளின் புகைப்படத்துடன் இதில் பதிவு செய்யலாம். நினைத்ததை விட அதிக விலைக்கு அந்த பொருளை வெளிநாட்டினருக்கோ, அல்லது நமது நாட்டை சேர்ந்தவர்களுக்கோ விற்க உதவுமில்லையா?" என்கிறார் மனோரஞ்சன்.

அவர் சொன்ன தகவல்களைவிட முத்தாய்ப்பாக சொன்ன விஷயம்தான் டபுள் ஆச்சர்யம். யெஸ் ..இந்த இணையதளத்தில் பதிவு செய்ய கட்டணமில்லையாம். முழுக்க முழுக்க இலவசம். அட இது ரொம்ப நல்லாருக்கே.

md@bluewireinfotech.com

support@bluewireinfotech.com

 


 

   
 

Copyright © 2005 tamilscreen.com  All rights reserved.
Best view under 800 X 600 Resolution with Netscape 4.x or IE 4.x and above version.

Netscape 6 not recommended