NEWS..VIEWS..REVIEWS..NEWS..VIEWS..REVIEWS..NEWS..VIEWS..REVIEWS..NEWS..VIEWS..REVIEWS..NEWS..VIEWS..REVIEWS..NEWS..VIEWS..REVIEWS..NEWS..VIEWS..REVIEWS..NEWS..VIEWS..REVIEWS..NEWS..VIEWS..REVIEWS..NEWS..VIEWS..REVIEWS..NEWS..VIEWS..REVIEWS..NEWS..VIEWS..REVIEWS..NEWS..VIEWS..REVIEWS..NEWS..VIEWS..REVIEWS..NEWS..VIEWS..REVIEWS..NEWS..VIEWS..REVIEWS..NEWS..VIEWS..REVIEWS..NEWS..VIEWS..REVIEWS..NEWS..VIEWS..REVIEWS..NEWS..VIEWS..REVIEWS..NEWS..VIEWS..REVIEWS..

 

Editor:
J.Bismi 

Home

Feedback:
editor@tamilscreen.com
Friday, October 30, 2009
       
விமர்சனம் பேட்டி கிசுகிசு ப்ளாஷ்பேக் கட்டுரைகள் பயோடேட்டா
கவர்ச்சீய்படங்கள் குளிர்ச்சிபடங்கள் சின்னத்திரை உலகசினிமா குறும்படங்கள் ஆவணப்படங்கள
       
  Preview

  

 

ஜெய்ஆகாஷ் இயக்கி நடிக்கும்
மதன்
காதல் கலந்த ஆக்ஷன் படம்


டிஜிட்டல் ராஜாராம் வழங்க, மீடியா பிளானட் என்ற புதிய பட நிறுவனம் சார்பில் டிஜிட்டல் ராஜாராம் மிகப்பிரம்மாண்டமாகத் தயாரிக்கும் படம் மதன். இந்தப்படத்தில் ஜெய்ஆகாஷ் கதாநாயகனாக நடிப்பதுடன், திரைக்கதை, வசனம் எழுதி இயக்குகிறார்.
இப்படத்தில் கதாநாயகிகளாக காதலில் விழுந்தேன், மாசிலாமணி வெற்றிப்பட நாயகியான சுனைனாவும், தாஸ், பிப்ரவரி14, கலாபக்காதலன் போன்ற படங்களில் நடித்தரேணுகா மேனனும் நடிக்கிறார்கள்.
மற்றும் ஜே.டி.சக்கரவர்த்தி, ப்ரீத்தி ஜிங்கானியா, தேவன், சுமித்ரா, சுமலதா, ராஜலட்சுமி, வேணுமாதவன், ஆர்த்தி, கணேஷ், ராஜ்கண்ணன், மாஸ்டர் பரத் ஆகியோர் நடிக்கிறார்கள்.
காதல் கலந்த ஆக்ஷன் படமாக உருவாகி வரும் மதன் படத்தில் வித்தியாசமான காதல் கதையைக் கையில் எடுத்திருக்கிறார் ஜெய்ஆகாஷ்.


இப்படத்தின் கதாநாயகனான மதன் ஒரு அனாதை. அதனால் தனக்கு மனைவியாக வரும் பெண் நிறைய சொந்த பந்தங்களுடன் இருக்க வேண்டும் என்று விரும்புகிறான் மதன். ஆனால் அவனே எதிர்பாராத வகையில் அவனது வாழ்க்கையில் இரண்டு பெண்கள் குறுக்கிடுகிறார்கள். ஒரு பெண் மதனுக்காக தன் சொந்தபந்தங்களை எல்லாம் துறந்துவிட்டு அவன் பின்னால் வரத்தயாராக இருக்கிறாள். இன்னொரு பெண்ணோ, என் சொந்த பந்தங்களை விட்டு வர மாட்டேன். அவர்களின் சம்மதத்துடன் நம் திருமணம் நடக்க வேண்டும் என்று கூறுகிறாள். இருவரில் மதன் யாரைக் கைப்பிடிக்கிறான் என்பதுதான் மதன் படத்தின் க்ளைமாக்ஸ்!


கதை: சீனுவைட்லா, ஒளிப்பதிவு: ராஜேஷ்யாதவ். இவர் ராமன் தேடிய சீதை, மழை, லீ, ராமகிருஷ்ணா போன்ற படங்களுக்கு ஒளிப்பதிவு செய்தவர். இசை: சாய்ஸ்ரீதர்- கோடீஸ்வரன், பாடல்கள்: கபிலன், ஆண்டாள் ப்ரியதர்ஷினி, ராஜ்கண்ணன், நடனம்: பாலாஜி, அசோக்ராஜ், சண்டைப்பயிற்சி: தவசிராஜ், கலை: கமல், தயாரிப்பு நிர்வாகம்: சின்னா, வேலு, இணை தயாரிப்பு: பி.ஜெகன்னாத்
திரைக்கதை, வசனம், இயக்கம்: ஜெ.ஆகாஷ்
தயாரிப்பு: டிஜிட்டல் ராஜாராம்
ஹைதராபாத், கேரளா, கொடைக்கானல், சென்னை போன்ற ஊர்களில் படப்பிடிப்பு நடைபெற்று முடிவடைந்தநிலையில் விரைவில் திரைக்கு வருகிறது - மதன்.

   
 

Copyright © 2005 tamilscreen.com  All rights reserved.
Best view under 800 X 600 Resolution with Netscape 4.x or IE 4.x and above version.

Netscape 6 not recommended