|
கச்சேரி ஆரம்பம்
புதுவசந்தம் தொடங்கி ஏராளமான வெற்றிப்படங்களைத் தயாரித்த சூப்பர்குட் பிலிம்ஸ்
பிரைவேட் லிமிடெட் ஆர்.பி.சௌத்ரி நீண்ட இடைவெளிக்கு பல கோடி செலவில் மிகவும்
பிரம்மாண்டமான படைப்பாக தயாரிக்கும் புதிய படம் - கச்சேரி ஆரம்பம்.
இந்தப்படத்தில் ஜீவா கதாநாகனாக நடிக்கிறார். தித்திக்குதே, ஆசை ஆசையாய்
படங்களுக்குப் பிறகு சூப்பர்குட் பிலிம்ஸ் பேனரில் ஜீவா நடிக்கும் படம் இது.
இப்படத்தின் கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்குகிறார் திரைவண்ணன் என்ற புதுமுக
இயக்குநர். இவர் பூபதிபாண்டியன், செல்வபாரதி, சீமான் ஆகியோரிடம் உதவியாளராக
இருந்தவர்.
கச்சேரி ஆரம்பம் திரைப்படத்தில் கதாநாயகியாக நடிக்கிறார் பூனம்பாஜ்வா. சமீபத்தில்
வெளியாகி மிகப்பெரிய வெற்றியடைந்த தெனாவெட்டு படத்துக்குப் பிறகு ஜீவா உடன்
பூனம்பாஜ்வா ஜோடி சேரும் படம் இது.
ஜீவா, பூனம்பாஜ்வா தவிர வடிவேலு, ஜே.டி.சக்கரவர்த்தி, அழகம்பெருமாள், காதல்
தண்டபாணி, சிசர் மனோகர், முத்துகாளை, பாவா லட்சுமணன், வேல்முருகன், கிங்காங்,
ஸ்ரீரஞ்சனி ஆகியோரும் நடிக்கிறார்கள்.
ஒளிப்பதிவு: வைத்தி
இசை: இமான்
பாடல்கள்: நா.முத்துக்குமார், திரைவண்ணன், விவேகா
கலை: ஷண்முகம்
படத்தொகுப்பு: வி.ஜெய்சங்கர்
நடனம்: பிருந்தா,அசோக்ராஜ், தினேஷ்
சண்டைப்பயிற்சி: பில்லா ஜெகன்
தயாரிப்பு நிர்வாகம்: கண்ணன்
தயாரிப்பு மேற்பார்வை: சின்னச்சாமி
இணை தயாரிப்பு: பி.சுரேஷ்
கதை, திரைக்கதை, வசனம், இயக்கம்: திரைவண்ணன்
தயாரிப்பு: ஆர்.பி.சௌத்ரி
movie gallery |