|
காந்தர்வன்
புதிய கோணத்தில் ஒரு காதல்கதை
தாமரை மூவீஸ் வழங்க, சௌத் இண்டியன் புரொடக்ஷன்ஸ் என்ற பட நிறுவனம் சார்பில்
வி.ஏ.ஆண்டமுத்து நிறைந்த பொருட்செலவில் மிகப்பிரம்மாண்டமாகத் தயாரிக்கும் படம் -
காந்தர்வன். இப்படத்தின் கதை, திரைக்கதை, வசனம் எழுதி சலங்கைதுரை இயக்குகிறார்.
இவர் கரண் நடிப்பில் வெளியாகி 100 நாட்கள் ஓடி, வெற்றியடைந்த காத்தவராயன் படத்தை
இயக்கியவர். சலங்கைதுரை இயக்கும் இரண்டாவது படமிது.
காந்தர்வன் படத்தின் கதாநாயகனாக கதிர் நடிக்கிறார். இதற்கு முன் நிறம் என்ற
படத்தில் கதாநாயகனாக நடித்தவர் இவர். தவிர நெஞ்சத்தைக்கிள்ளாதே படத்திலும், தற்போது
தயாரிப்பில் இருக்கும் நாளை நமதே படத்திலும் முக்கிய வேடங்களில் நடித்தவர்.
கதாநாயகியாக கேரளத்தைச் சேர்ந்த ஹனிரோஸ் நடிக்கிறார்.
மற்றும் ராஜ்குமார், ஜே.எம்.எஸ். துரை ஆகியோரும் நடிக்க, இவர்களுடன் தயாரிப்பாளர்
ஆண்டமுத்து முக்கியமான கதாபத்திரத்தில் நடிக்கிறார். மற்ற கதாபாத்திரங்களில்
நடிக்கும் நட்சத்திரங்களின் தேர்வு நடைபெற்று வருகிறது.
காந்தர்வன் படத்தின் கதையைப் பற்றி இயக்குநர் சலங்கைதுரையிடம் கேட்டபோது,
''இது ஒரு காதல்கதை. ஆனால் வழக்கமான காதல் இருக்காது. காதலை புது கோணத்தில் சொல்ல
இருக்கிறேன். அதாவது இந்தப்படத்தைப் பார்க்கும் இளம்பெண்கள் பலர் இப்படத்தின்
கதாநாயகனைப்போல் நமக்கு காதலன் இருக்கக் கூடாது என்று நினைப்பார்கள். அந்தளவுக்கு
வெறுக்கத்தக்க ஒருவனாக என் படத்தின் கதாநாயகன் பாத்திரம் இருக்கும்.'' என்கிறார்.
ஒளிப்பதிவு: அனில் கே. சேகர். இவர் பிரசாந்த் நடிப்பில் வளர்ந்து வரும்
மம்பட்டியான் படத்திற்கு ஒளிப்பதிவு செய்து வருபவர்.
இசை: அலெக்ஸ் பால். மம்முட்டி, மோகன்லால் உட்பட முன்னணி நட்சத்திரங்கள் நடித்த
சுமார் இருபது மலையாளப்படங்களுக்கு இசையமைத்தவர் இவர். மலையாள நடிகரும்,
இயக்குநருமான லால் அவர்களின் சகோதரரான அலெக்ஸ்பால் காந்தர்வன் படத்தின் மூலம்
தமிழில் அறிமுகமாகிறார்.
படத்தொகுப்பு: எஸ்.எம்.வி.சுப்பு
கலை: எம்.ஏ.ராஜதுரை
கதை,திரைக்கதை, வசனம், இயக்கம்: சலங்கைதுரை
தயாரிப்பு: வி.ஏ. ஆண்டமுத்து
Movie Gallery |