|
தம்பிக்கு இந்த ஊரு
வி.கே.மீடியா பிரைவேட் லிட் என்ற பட நிறுவனம் சார்பில் ஜே.சரவணன், சி.பாஸ்கர்
இருவரும் இணைந்து மிகப்பிரம்மாண்டமாகத் தயாரிக்கும் புதிய படம் தம்பிக்கு இந்த ஊரு.
பரத் கதாநாயகனாக நடிக்கும் இப்படத்தை வீராப்பு, ஐந்தாம்படை படங்களை இயக்கிய பத்ரி,
கதை, திரைக்கதை, எழுதி இயக்குகிறார்.
இப்படத்தில் பிரபு, ரஞ்சித் இருவரும் முக்கிய வேடங்களில் நடிக்கிறார்கள்.
சிலம்பாட்டம் படத்தில் அறிமுகமான சனாகான் இப்படத்தில் கதாநாயகியாக நடிக்கிறார்.
இன்னொரு கதாநாயகியாக ரூபாலி என்ற புதுமுகம் நடிக்கிறார்.
வித்தியாசமான நகைச்சுவை வேடத்தில் விவேக் நடிக்க, மற்றும் நிழல்கள் ரவி, யுவராணி,
ஆர்த்தி, பிரம்மானந்தம், லட்சுமணன், சரண்யா பொன்வண்ணன் ஆகியோரும் நடிக்கிறார்கள்.
இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
மலேஷியாவிலிருந்து சென்னைக்கு வரும் அகிலன் (பரத்), திவ்யா (சானாகான்) இருவரும்
மீனவக்குப்பத்துக்கு வருகிறார்கள். மீனவ மக்கள் அனைவரும் ஒன்று திரண்டு அவர்களை
வரவேற்கும்விதமாக,
தம்பிக்கு இந்த ஊரு
அடங்க மறுத்த
அழகு சிறுத்தை
எங் தம்பிக்கு இந்த ஓரு
என்று ஆடிப்பாடுகிறார்கள்.
திருவிழா நடப்பது போன்ற பின்னணியில், சென்னை, பட்டினப்பாக்கத்தில் உள்ள
கடலோரப்பகுதியில் படமாக்கப்பட்ட இந்தப்பாடல்காட்சிக்காக 80 அடி உயரத்தில்
எம்.ஜி.ஆர். கட் அவுட் வடிவமைக்கப்பட்டது. அந்த கட்அவுட் முன் ஆடிப்பாடி நடித்த பரத்,
மீனவநண்பன், நம்நாடு படங்களில் எம்.ஜி.ஆர். அணிந்திருந்தது போன்ற உடை அணிந்து
எம்.ஜி.ஆர். கெட்டப்பில் நடித்தார்.
டான்ஸ்மாஸ்டர் தினேஷ் நடனஅமைப்பில், பரத், சனாகான் பங்குபெற்ற இந்தப்பாடல்காட்சியில்
அறுபது நடனக்கலைஞர்களுடன், ஆயிரக்கணக்கான துணை நடிகர்களும் பங்கு பெற்றனர். அதோடு,
ஐம்பது ஆட்டோக்களும், நூற்றுக்கும் மேற்பட்ட மீன்பாடி வண்டிகளும்
இப்பாடல்காட்சியில் பயன்படுத்தப்பட்டன.
வசனம்: டி.செந்தில்குமரன்- சுப்பிரமணியம்
ஒளிப்பதிவு சாலை சகாதேவன்
இசை: டி.மான்
பாடல்கள்: கபிலன்
கலை: ஜனா
படத்தொகுப்பு: சுராஜ்கவி
சண்டைப்பயிற்சி: தளபதி தினேஷ்
நடனம்: தினேஷ், பிருந்தா, கல்யாண், சரவணன், எஸ்.எல். பாலாஜி
தயாரிப்பு: வி.கே. மீடியா பிரைவேட் லிட்., ஜே.சரவணன், சி.பாஸ்கர்
கதை, திரைக்கதை, இயக்கம்: பத்ரி
தம்பிக்கு இந்த ஊரு படத்தின் படப்பிடிப்பு சென்னையில் தொடங்கி நடைபெற்றுவருகிறது.
தொடர்ந்து ஹைதராபாத்திலும், சிங்கப்பூர், மலேஷியா, ஆஸ்திரேலியா போன்ற
வெளிநாடுகளிலும் நடைபெறவிருக்கிறது.
|