|
ட்வென்ட்டி ஃபர்ஸ்ட் செஞ்சுரி பிலிம்ஸ் (21st சிமீஸீtuக்ஷீஹ் திவீறீனீs) என்ற பட
நிறுவனம் பெரும் பொருட்செலவில் மிகப்பிரம்மாண்டமாகத் தயாரிக்கும் படம் - மீண்டும்
மீண்டும்!
இப்படத்தின் கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்குகிறார் ஹரிதாஸ். நியூயார்க்
யுனிவர்சிட்டியில் பிலிம் மேக்கிங் கோர்ஸ் படித்த இவர், 1994ல் 'மூணுல ஒண்ணு' என்ற
மலையாளப்படத்தை இயக்கியவர். தவிர, எட்டு குறும்படங்களையும் இயக்கியவர். ஹரிதாஸ்
இயக்கிய அனைத்து குறும்படங்களுமே சர்வதேச பட விழாக்களில் பல்வேறு விருதுகளைப்
பெற்றிருக்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது.
மீண்டும் மீண்டும் தமிழில் இவர் இயக்கும் முதல் படம்.
இப்படத்தில் ராஜ்கிருஷ்ணா என்ற புதுமுகம் கதாநாயகனாக அறிமுகமாகிறார். கதாநாயகியாக
அஸ்வதா என்ற புதுக்கதாநாயகி அறிமுகமாகிறார். இரண்டாவது கதாநாயகனாக பிரபாகர்
நடிக்கிறார்.
பலபேரை அழைத்து அவர்களுக்கு தேர்வு வைத்து அதில் வெற்றியடைந்த பிறகே இப்படத்தில்
நடிக்க இவர்கள் தேர்வு செய்யப்பட்டிருக்கிறார்கள்.
மற்றும் விஜயலட்சுமி, ஜே.மின்டோ, பாட்ஷி, பட்டேல், மகேஷ் ஆகியோரும் நடிக்கிறார்கள்.
தொடக்கம் முதல் இறுதிக்காட்சி வரை சஸ்பென்ஸ் நிறைந்த பொழுதுபோக்கு படமாக உருவாகி
வருகிறது - மீண்டும் மீண்டும் திரைப்படம்.
இப்படத்தில் எட்டு பாடல்கள் இடம்பெறுகின்றன. தமிழ்த்திரைப்படங்களில் பாடல்காட்சிகள்
கதையைவிட்டு விலகிச்செல்வது வழக்கமான விஷயம். இந்தப்படத்தில் எட்டுப்பாடல்களுமே
கதையோட்டத்துடன், கதையை ஒட்டியே அமைக்கப்பட்டிருக்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது.
இசை: ஜவஹர். ஒவ்வொரு பாடலையும் ஒவ்வொரு வகையான இசைமரபில் உருவாக்கி இருக்கிறார்
ஜவஹர். தவிர இசையமைப்பில் பல புதுமைகளையும், புதிய முயற்சிகளையும்
மேற்கொண்டிருக்கிறார். இப்படத்தின் பாடல்கள் தமிழ்த்திரையிசையில் ட்ரெண்ட்செட்டாக
அமையும் என்பது நிச்சயம்.
ஒளிப்பதிவு: சூர்யா
படத்தொகுப்பு: இ.எம்.மாதவன்
கலை: சுதந்திரராஜன்
ஆவிட் ஆபரேட்டர்: கேசவன்
நடனம்: பாலகிருஷ்ணன்
பாடல்கள்: கவிராஜ்
தயாரிப்பு மேற்பார்வை: வி.எஸ்.ஜோஸ்
உதவி இயக்கம்: ராஜா, ஜீவா
இணை இயக்கம்: பாலபாரதி
கதை, திரைக்கதை, வசனம், இயக்கம்: ஹரிதாஸ்
அமெரிக்காவில் திரைப்பட உருவாக்கம் பற்றி பயிற்சி பெற்ற ஹரிதாஸ், தன்
திரைப்படஅறிவைக் கொண்டு ஹாலிவுட் தரத்திற்கு தமிழில் சஸ்பென்ஸ் படத்தை உருவாக்கி
இருக்கிறார். இசை, ஒளிப்பதிவு, படத்தொகுப்பு என அனைத்து அம்சங்களுமே தமிழில் இதுவரை
பார்த்திராத புதிய அனுபவத்தைத் தரும். |