Editor: J.Bismi

 
விமர்சனம் பேட்டி கிசுகிசு ப்ளாஷ்பேக கட்டுரைகள் பயோடேட்டா
கவர்ச்சீய்படங்கள் குளிர்ச்சிபடங்கள் சின்னத்திரை உலகசினிமா குறும்படங்கள் ஆவணப்படங்கள
முதல் பக்கம்

 

 

நயன்தாரா

 

 




பூவுக்குள் கனி ஒளிந்திருப்பதும் விதைக்குள் விருட்சம் மறைந்திருப்பதும் கணித்திட முடியாத பிரம்ம இரகசியம்.
அது போலவே யார் எப்படி எதிர்காலத்தில் வருவார்கள் என்பதும் புரிந்து கொள்ள முடியாத புதிர்தான். அவிழ்க்க முடியாத முடிச்சுதான்.
கேரளாவில் மத்திய திருவிதாங்கூர் பகுதியில் திருவல்லா கிராமத்தில் பிறந்த டயானா குரியன் திரையில் தோன்றி நயன்தாராவாகப் பிரகாசிப்பார் என்று யாருமே கனவு கண்டதில்லை.
சத்தியன் அத்திக்காடு என்கிற பிலபல மலையாள இயக்குநநார் மனசினக்கரே படத்தில் அறிமுகமானார். பிறகு மம்முட்டி, மோகன்லால் போன்ற மலையாள நட்சத்திரங்களுடன் நடித்தார்.
தமிழில் ஐயாவில் அறிமுகமானார், ஆனால் சூப்பர் ஸ்டார் ரஜினியுடன் சந்திரமுகியில் நடித்த பின்புதான் இவருக்கு சுக்கிரதிசை அடித்து.
மளமளவென்று வளர்ந்தார். உயர்ந்தார். இன்று தமிழ்நாட்டின் வணிக மதிப்புள்ள கதாநாயகி.
சேரநாட்டு உறவாக வந்தவர், செந்தமிழல் நிலவாகிவிட்டார்.
நயன்தாரா... இந்தப் பெயரைச் சொன்னாலே மின்வெட்டு நிலவும் தமிழகத்தில் கூட ரசிகன் இதயத்தில் குறைந்த அழுத்த மின்சாரம் பாய்கிறது. தமிழ்ரசிகர்களின் கனுவுகளில் வலம் வரும் இவரைத் தங்கள் படங்களில் இடம் பெற வைக்க கடும் போட்டியில் தயாரிப்பாளர்கள் இயக்குநர்கள்.
மலையாளம் - தமிழ் என்று நடித்தவர், தெலுங்குப் பக்கம் போய் அங்கும் வெற்றி பெற்றார். இன்று நயன்தாரா தென்னிந்தியாவின் திசைபேசும் நட்சத்திரம்.
ஒரு வார்த்தை பச ஒரு வருஷம் காத்திருந்தேன் என்று ஐயாவில் பாடி நடித்தது இந்த கொய்யா. இன்று ஓயாத படப்பிடிப்பின் இடையே ஏதாவது பேசமாட்டாரா என்று காத்திருக்கிறது மீடியா. எப்படி ஏற்பட்டது இந்த ரசவாத மாற்றம்? யாரால் நடந்தது இந்த பிரகாச முன்னேற்றம்? கேட்டால்... சிரிக்கிறார். பல பெரிய கேள்விகளுக்கும் சிரிப்பையே பதிலாக அளிக்கிறார்.
நான் தமிரீல் ஐயாவில் அறிமுகம் ஆனேன். ஆனால் சந்திரமுகி படத்தில் நடத்தது என் அதிர்ஷ்டம் என்று சொல்வேன். அந்தப் படத்துக்குப் பிறகுதான் எல்லா மேஜிக்கும் நடந்தது.

ஆக... ஒரு படத்தில் நடிக்கும்போது யாருடன் நடிக்கிறோம் என்பது முக்கியம் அப்படித்தானே?
ஆம் அதே சமயம் டைரக்டர் யார் கம்பெனி எது கதை என்ன என்பதையும் கார்க்க வேண்டிய அவசியம் சுருக் பதில்.


சினிமாவில் கதாநாயகிகளுக்கு அதிகம் வேலையில்லையே...?
இதில் ஓரளவு உண்மையும் இருக்கிறது. ஹீரோவை மையமாக வைத்தே பெரும்பாலும் கதை இருக்கும். சினிமா மேல் ஓரியண்டட் தொழில்தான் இருந்தாலும் கிடைக்கிற வாய்பில் எப்படி நாம் பிரகாசிக்கிறோம் என்பது முக்கியம். வளர்ந்து ஹீரோயின் ஓரியண்டட் சப்ஜெக்டில் நடித்த பலரும் ஆரம்பக்£லத்தில் ஹீரோவைச் சுற்றிவரும் கேரக்டர்களில் நடித்தவர்கள்தான்.

கதாநாயகிகளுக்கு முக்கியத்துவம் கொண்ட படங்களில் நடிக்க விருப்பமில்லையா?
அப்படிக் கூற முடியாது. அப்படிப்பட்ட வாய்ப்பு இன்னும் வரவில்லை. வந்தால் நடிப்பேன்.


கவர்ச்சியாக நடிக்கவே ஆர்பம் காட்டுவது போலத் தெரிகிறதே?
நான் நடித்த எல்லாப் படங்களிலும் அப்படியா நடித்தேன்? ஐயாவில் என் அறிமுகமே ஹோம்லியாகத்தான் இருந்தது. ஈ, யாரடி நீ மோகினி படங்களில் குடும்பப் பாங்காக நடித்திருந்ததை மறந்து விட்டீர்களா?


உங்களைப் பற்றி வரும் கிசுகிசுக்கள் பற்றி?
கிசுகிசு என்றாலே பொய்தானே? சம்பந்தப்பட்டவர் தவிர எல்லாரும் கிசுகிசுவைப் படிப்பார்கள், ரசிப்பார்கள் சம்பந்தப்படும்போதுதான் அதன் வருத்தம் புரியும். நான் கல்லூரியில் படித்தபோது இப்படிப் பட்ட கிசுகிசுக்களை விரும்பிக் கேட்டதுண்டு. சினிமாவுக்கு வந்த புதிதில் இப்படிப்பட்ட செய்திகள் பற்றி கவலையாக இருந்தது. எல்லாருமே இதில் அடிபட்டு மேலே வந்தவர்கள்தான் யார் பற்றி கிசுகிசு வரவில்லை... இதை இப்போது புரிந்து கொண்டேன். சினிமா வாழ்க்கை என்பது இதையெல்லாம் சேர்த்துத்தான் என்று சகஜமாகிவிட்டேன். பிரபலமாகிறவர்கள் பிரபலமாவதற்குக் கொடுக்கும் விலை - இழப்புகளில் இதுவும் ஒன்று.


பிரபலமாக இருப்பதால் வேறு என்ன இழப்புகள்?
சுதந்திரம் போய்விட்டது. விரும்பியதைச் சாப்பிட முடியாது. சிமி£வில் நடிகைகள் அழகாக, இளமையாக கவர்ச்சியாக இருக்க வேண்டுமென்று ரசிகர்கள் எதிர்பார்க்கிறார்கள். ஏனெனில் திரையில் வருபவர்களை ரசிகர்கள் ரவிப்பது மட்டுமல்ல தங்களின் முன்மாதிரியாகவும் நினைக்கிறார்கள். அதனால் அதைக் காப்பாற்ற வேண்டியிருக்கிறது. தோற்றத்தில் கவனம் செலுத்த வேண்டியிருக்கிறது.


உங்கள் அழகைப் பராமரிக்க என்ன செய்கிறீர்கள்?
நான் பெரிதாக உடற்பயிற்சி எதுவும் செய்வது கிடையாது. ஆனால் உணவுக் கட்டுப்பாட்டில் கவனமாக இருப்பேன். ஐஸ் கிரீம், குளிர்பானங்கள், எண்ணெய் இனிப்புகள் போன்றவற்றை தவிர்ப்பேன் பருவகாலங்கள், தண்ணீர் அலங்காரப் பொருட்கள் அழகுசாதனப் பொருட்கள் போன்றவை உடல் சருமத்தில் மாறறம் ஏற்படுத்துபவை. அவற்றிலிருந்து சருமத்தை பாதுகாப்பாக வைத்திருக்க சிறப்பு கவனம் எடுத்துக் கொள்வேன்.


விரும்பிச் சாப்பிடும் உணவு வகைகள்?
அப்பா விமானப்படையில் பணிப்புரிந்தார். என் பள்ளிப் பருவம் டில்லியில் கழிந்தது. வட இந்தியாவில் நாங்கள் இருந்ததால் வட இந்திய உணவு வகை எனக்குப் பழக்கமாகிவிட்டது. எனவே நான் பெரும்பாலும் சாப்பிடுபவை இந்திய உணவுவகைகள்தான். எனக்கு சாப்பிட மட்டும் தெரியும். சமைக்கத் தெரியாது. சமையல் அறையில் புகுந்து கொண்டு சமையல் பற்றி விமர்சனம் செய்வது எனக்கு பிடிக்கும்.


வேறு என்ன பிடிக்கும்? நீங்கள் எப்படிப்பட்ட குணம் கொண்டவர்?
என் குணம் என்ன... நான் எப்படிப்பட்ட கேரக்டர் என்று சரியாக என்னால் வரையறுக்க முடியாது. தெரியாது நான் நினைத்து நடக்கவில்லை என்றால் ஏமாற்றம் கோபம் வரும். அதை நான் மறைத்தாலும் என் முகத்துக்கு மறைக்கத் தெரியாது. அது எப்படிப்பட்ட எதிர்பார்பு? பெரியவிஷயமா? சின்ன விஷயமா? என்பது அவ்வப்போது மாறும். ஒரே விஷயத்தை சில நேரம் பெரிதாக எடுத்துக் கொள்வேன். சில நேரம் சாதாரணமாக விட்டு விடுவேன்.
எனக்கு மெலிதான பாட்டு கேட்கப் பிடிக்கும், பயணம் பிடிக்கும், காரில் போக அதுவும் நீண்ட தூரம் போக பிடிக்கும்.


உங்கள் நெருங்கிய வட்டம்?
எனக்கு நெருங்கிய நட்பு வட்டம் என்று என் குடும்பத்தினரைத்தான் சொல்வேன். எனக்கு வீட்டில் செல்லம் உண்டு. அதற்கு ஓர் எல்லையும் வைத்திருப்பார்கள். என் அண்ணனுக்கும் எனக்கும் 9 வயது வித்தியாசம் அவர் குடும்பத்தினர் இப்போது துபாயில் இருக்கிறார்கள். என் எல்லா விஷயங்களையும் பகிர்ந்து கொள்ள கூடிய ஒரே இடம் என் குடும்பம்தான் அந்த உரிமையும் செல்லமும் வேறு எங்கும் கிடைக்காது.


பொங்கல் வெளியீட் வில்லுவில் விஜயுடன் ஜோடியாக நடித்தது பற்றி?
வில்லு எனக்கு சந்தோஷமான அனுபவம் அவருடன் ஜோடியாக நடித்தது என் அதிர்ஷ்டமாக நினைக்கிறேன்.


இப்போது நடித்து வருபவை?
மலையாத்தில் பாடிகாட் என்றொரு படத்தில் நடிக்கிறேன். தமிழில் கே.எஸ்.ரவிகுமார் இயக்குத்தில் சூர்யா ஜோடியாக நடிக்க இருக்கிறேன்.
 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

   
   
   
   
   
   
   
   
   
   
 

 

 

 

   

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 
   

 

     

Free Site Counter
Free Site Counter

Copyright © 2005 tamilscreen.com  All rights reserved.
Best view under 800 X 600 Resolution with Netscape 4.x or IE 4.x and above version.
Netscape 6 not recommended