Editor: J.Bismi Send your comments to  tamilscreen.com@gmail.com

 
விமர்சனம் பேட்டி கிசுகிசு ப்ளாஷ்பேக கட்டுரைகள் பயோடேட்டா
கவர்ச்சீய்படங்கள் குளிர்ச்சிபடங்கள் சின்னத்திரை உலகசினிமா குறும்படங்கள் ஆவணப்படங்கள
முதல் பக்கம்

 

 

ஆண் வேடத்தில் பூமிகா
மல்லிகை படத்துக்காக படமான காட்சி

 

 

சமுத்திரா சில்வர்ஸ்க்ரீன்ஸ் வழங்க சாய்துர்கா தன்மயஸ்ரீ மூவீஸ் என்ற பட நிறுவனம் சார்பில் மோகன்குமார்.ஜி. அதிக பொருட்செலவில் பிரம்மாண்டமாகத் தயாரிக்கும் புதிய படம் மல்லிகை. இப்படத்தின் கதை, திரைக்கதை, வசனம் எழுதி வி.சமுத்திரம் என்ற புதிய இயக்குநர் இப்படத்தை இயக்குகிறார்.
மல்லிகை படத்தில் முரளிகிருஷ்ணன் கதாநாயகனாக நடிக்க, அவருக்கு ஜோடியாக நடிக்கிறார் பூமிகா. சில்லுனு ஒரு காதல் படத்துக்குப் பிறகு பூமிகா தமிழில் நடிக்கும் படம் இது.
இந்தப்படத்தின் பல காட்சிகளில் ஆண் வேடத்தில் பூமிகா நடித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
சரத்குமார் நடிக்கும் 1977 படத்தில் நாயகியாக நடித்து வரும் பர்ஸானா இப்படத்தில் இரண்டாவது நாயகியாக நடிக்கிறார்.
மற்றும் கோவை சரளா, சுமன்ஷெட்டி, காதல் சுகுமார், அபிநயஸ்ரீ, அனுராதா ஆகியோரும் நடிக்கிறார்கள். இவர்களுடன் வில்லனாக பிரபல ஹிந்திப்பட நடிகர் மகேஷ் நடிக்கிறார்.
காதல் கதை அம்சத்தை அடிப்படையாகக் கொண்டிருந்தாலும் அதிரடி காட்சிகள் கொண்ட ஆக்ஷன் படமாகவே மல்லிகை படம் தயாராகி வருகிறது.
பல கோடி செலவில் தயாரிக்கப்பட்ட மல்லிகை திரைப்படம் விரைவில் திரைக்கு வருகிறது.
வசனம்: வினோத்
ஒளிப்பதிவு: அனில்
இசை: இளையராஜா
பாடல்கள்: சினேகன், யுகபாரதி
கலை: ராஜன்
நடனம்: கிருஷ்ணா ரெட்டி
சண்டைப்பயிற்சி: செல்வம்
படத்தொகுப்பு: ஹரி
கதை, திரைக்கதை, வசனம், இயக்கம்: வி.சமுத்திரம்
தயாரிப்பு: மோகன்குமார்.ஜி.

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

   
   
   
   
   
   
   
   
   
   
 

 

 

 

   

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 
   

 

     

Free Site Counter
Free Site Counter

Copyright © 2005 tamilscreen.com  All rights reserved.
Best view under 800 X 600 Resolution with Netscape 4.x or IE 4.x and above version.
Netscape 6 not recommended